கடப்பேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடப்பேரி (kadaperi) என்பது இந்தியாவின் சென்னையில் தாம்பாரத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. சுமார் 2000 மக்கள் வசிக்கும் பகுதியாகும். கடப்பேரி சென்னையின் ஏற்றுமதி மண்டலத்திற்கு அருகில் உள்ளது.[1] இது சென்னையின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாகும். பச்சை மலை புல்வெளி மற்றும் ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. இந்த பகுதி தமிழகத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளான 163 இடங்களில் (பெருங்கற்காலத் தளங்கள்) ஒன்றாகும்.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

கட (கன்னடம் / தமிழில்), என்பது கதவு அல்லது நுழைவாயில் என்பதாகும். எனவே கட+ஏரி கடப்பேரி என்றால் சென்னையில் "நுழைவாயில் ஏரி" என்று பொருள்படும்.

போக்குவரத்து இணைப்புகள்[தொகு]

தாம்பரம் சானடோரியம் தொடருந்து நிலையம், பேருந்து நிலையம், விமானப்படை தளம் ஆகியவை இப்பகுதியின் அருகிலேயே உள்ளன. இது தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் உள்ளது. கடப்பேரி சந்திப்பானது தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ஒரு சந்திப்பிடமாகும்.

வரலாறு[தொகு]

1900 களின் முற்பகுதியில் கடப்பேரியில் முதலில் குடியேறியவர் வெங்கடேச பிள்ளை என்பவராவார். கடப்பேரி ஆரம்பத்தில் விவசாய நிலமாக இருந்தது. கடப்பேரியின் முதல் ஜமீன்தார் வெங்கடேச பிள்ளை. கடப்பேரியில் அமைந்துள்ள சுங்கு விநாயகர் கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகவும், கோயில் விஸ்வநாதர், விசாலட்சி, தட்சிணாமூர்த்தி, முருகர், துர்கை, லிங்கோத்பவர், நவநிதகிருஷ்ணர், மகாலட்சுமி மற்றும் நவகிரகம் ஆகியவற்றுடன் புனரமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. விமானம் காசி கோயிலுக்கு ஒத்ததாகும். நிதி இல்லாததால் கோயில் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது. கங்கை அம்மன் கோயில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் போன்ற கோயில்களும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEPZ". பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
  2. Madhavan, D. (20 December 2012). "National Institute of Siddha modifies expansion plan". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/national-institute-of-siddha-modifies-expansion-plan/article4218676.ece. பார்த்த நாள்: 23 Dec 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடப்பேரி&oldid=3067124" இலிருந்து மீள்விக்கப்பட்டது