உள்ளடக்கத்துக்குச் செல்

கடனுறுதிச் சீட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1926இல் பர்மாவில் இருபதாயிரம் ரூபாய்க்கான கடனுறுதிச் சீட்டு. இதற்கு வருடத்திற்கு ஆறரை சதவிகிதம் வட்டி.

கடனுறுதிச் சீட்டு (ஆங்கிலம்: Promissory note) என்பது ஒரு வகை கடன் பத்திரம். இது பெரும்பாலும் பேச்சு வழக்காக புரோநோட்டு என அழைக்கப்படுகிறது. கடனுறுதிச் சீட்டு என்பது கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு எழுதிக் கொடுப்பது. இது ஒரு பதிவு செய்யப்படாத பத்திரம். இதற்கு சாட்சிகள் உண்டு. இந்த கடனுறுதிச் சீட்டுக்கான காலஅளவு (செல்லுபடியாகும் காலம்) மூன்று வருடங்கள். மூன்று வருடங்களுக்கு மேல் தொடரவேண்டுமெனில் புதிதாக கடனுறுதிச் சீட்டு எழுத வேண்டும் அல்லது இந்த கடனுறுதிச் சீட்டு வரத்து அதாவது வரவு வைக்கவேண்டும். உட்புறத்தில் நான் இந்த தேதியில் (எ.கா:ரூ-1000/-) அசலில் செலுத்தியுள்ளேன் என்று எழுதி கையொப்பம் இட வேண்டும். இதனடியில் சாட்சிகள் (2 நபர்கள்) கையொப்பம் இடவேண்டும். சாட்சி கையெழுத்து போடுபவர் தனது தந்தை பெயர், ஊர் போன்ற விபரத்தையும் எழுத வேண்டும். கடனுறுதிச் சீட்டு எழுதிக்கொடுப்பவர் ஒரு ரூபாய் வருவாய் முத்திரை (revenue stamp) ஒட்டி அதன் மேல் கையொப்பம் இடவேண்டும். அப்படி கையொப்பம் இடவில்லை என்றால் கடனுறுதிச் சீட்டு செல்லாது. மேலும் கடனுறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் பெற்றவர் திருப்பி செலுத்தவில்லை என்றால் பணம் கொடுத்தவர் நீதிமன்றத்தில் கடனுறுதிச் சீட்டைத் தாக்கல் செய்தால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணலாம். கடன் செலுத்தாதவர்களுடைய சொத்துக்களை நீதிமன்றம் பறிமுதல் செய்து கடன் கொடுத்தவருக்கான தொகையை வழங்கிவிடும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பணிநிறைவு விழா மலர்"-கடனாளி, ஆசிரியர்: தங்கவேலு, ஆண்டு=2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடனுறுதிச்_சீட்டு&oldid=3589421" இலிருந்து மீள்விக்கப்பட்டது