கஞ்சியா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கஞ்சியா ஏரி (ஒடியா: କାଞ୍ଜିଆ ହ୍ରଦ , ଓଡିଶା, Kanjia Lake) இது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள, புவனேசுவர் வடக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை ஏரியாகும். முக்கிய ஏரிகளில் ஒன்றான இது, 75 எக்டேர் (190 ஏக்கர்) பரப்பளவில் வியாபித்துள்ளது. மேலும் 105 எக்டேர் (260 ஏக்கர்) பரப்பளவில் இசுகூபா மூழ்கல் வசதி செய்யப்பட்டுள்ள இந்த ஏரி, ஒரு பன்முக பல்லுயிர் வளம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மற்றும் நகரின் சுற்றுச்சூழலை பராமரிக்கவும் உதவுகிறது.[1]

ஏரிகளின் சுற்றுச்சூழல்[தொகு]

37 வகையான பறவைகள், 20 வகை ஊர்வனங்கள், 10 வகை உயிரிப்பினங்கள், 46 வகையான மீன்கள் மற்றும் மூன்று வகை இறால்கள், 10 வகை துணை - இணைக்கப்பட்ட பெருநீர்த்தாவரங்கள், 14 இனங்கள் மிதக்கும் பெருநீர்த்தாவரங்கள் மற்றும் 24 இனங்கள் வெளிப்படையான பெருநீர்த்தாவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கட்டுப்பாடற்ற கற்சுரங்க திடக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமும், அதன் வட்டப்பகுதிகளில் அஸ்திவாரங்களை நிர்மாணிப்பதற்கும் இந்த ஏரி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanjia Lake". www.nandankanan.org (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2017-08-24.
  2. "Nandankanan lake chokes". www.telegraphindia.com (ஆங்கிலம்) (© 2017). பார்த்த நாள் 2017-08-24.
  3. Kanjia lake shrinking?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சியா_ஏரி&oldid=2407405" இருந்து மீள்விக்கப்பட்டது