கஞ்சாநகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சாநகரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கஞ்சாநகரம் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திலுள்ள கிராமம்[4]. மிகப்பழமையான புராண வரலாற்றைத் தன்னகத்தேக் கொண்ட ஊர். இந்த ஊருடன் சேர்த்து அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில், பெருமங்கலம், ஆனந்ததாண்டவபுரம், திருநன்றியூர் ஆகிய ஐந்து ஊர்களையும் ஆண்ட சோழ மன்னனின் குறுநிலத் தலைவன் மானக்கஞ்சாரநாயனார் ஆண்ட இடமாதலால் மானக்கஞ்சாரபுரம்-கஞ்சாரநாயனார் புரம் - கஞ்சாநகரம் என மருவிப் பெயர் பெற்றதாகச் செவிவழிச் செய்தி வழங்கி வருகிறது. இங்குள்ள காத்ர சுந்தரேசுவரர் கோயில் நாகப்பட்டின மாவட்டத்திலுள்ள முக்கியமான சிவாலயங்களில் ஒன்று. 63 நாயன்மார்களில் மானகஞ்சார நாயனார் பிறந்து முக்தி அடைந்த தலம் இது[5].

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
  5. http://temple.dinamalar.com/New.php?id=1374
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சாநகரம்&oldid=3547365" இலிருந்து மீள்விக்கப்பட்டது