கஜானன் திகம்பர் மதுல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
க. தி. மதுல்கர்
200px
க. தி. மதுல்கர்
புனைப்பெயர் गदिमा (GaDiMā) கா.தி.ம
தொழில் கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் எழுத்தாளர், நடிகர், சொற்பொழிவாளர்
நாடு இந்தியா
இலக்கிய வகை மராத்திய இலக்கியம்
இயக்கம் மராத்திய இலக்கியம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
கீத இராமாயணம்
gadima.com

கஜானன் திகம்பர் மதுல்கர் (Gajanan Digambar Madgulkar) (1 அக்டோபர் 1919 - 14 திசம்பர் 1977) ஒரு மாரத்தி கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளரும் இந்திய நடிகருமாவாவார். இவர் தனது சொந்த மாநிலமான மகாராட்டிராவில் கா தி ம (गदिमा) என்ற எழுத்துக்களால் பிரபலமாக அறியப்படுகிறார். இவருக்கு 1951 இல் சங்கீத நாடக அகாதமி விருதும் [1] 1969 இல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது. [2] இவர் தனது வாழ்க்கையில் 157 திரை நாடகங்களையும் 2000க்கும் மேற்பட்ட பாடல்களையும் எழுதியுள்ளார். [3] மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பான "கீத ராமயணத்தின்" (இலக்கியம்) இசையமைப்பால் தற்போதைய சகாப்தத்தின் 'நவீன வால்மீகி' என்று அழைக்கப்பட்டார். 2019 இவரது பிறந்த நூற்றாண்டு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. மகாராட்டிரா அரசு பல்வேறு நிகழ்வுகளையும் விழாக்களையும் நடத்துகிறது.

தொழில்[தொகு]

மதுல்கர் கவிதை, சிறுகதைகள், புதினக்கள், சுயசரிதை, மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களுக்கான வசனங்கள், பாடல் வரிகளை எழுதினார். இவரது கவிதைகள் சுகம்-சங்கீத் (ஒளி இசை), பாவகீதம் (உணர்ச்சிப் பாடல்கள்), பக்திகீதம் (பக்தி பாடல்கள்), லாவணி ( மகாராட்டிராவில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் வகை) போன்ற பல்வேறு வகையான இசை வடிவங்களுக்குத் தழுவின . இவர் 1938 இல் கோலாப்பூரில் திரைப்பட உலகில் நுழைந்தார். 157 மராத்தி மற்றும் 23 இந்தி திரைப்படங்களுக்கு பங்களித்தார். இவர் ஒரு ஓவியராகவும் இருந்தார். இவர் இயற்கை காட்சிகளை வரைய விரும்பினார்.

மராத்தி, இந்தி, ஆங்கிலம், உருது, பெங்காலி, குசராத்தி, பஞ்சாபி, கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் இவருக்கு அறிவு இருந்தது. இவர், மராத்தியில் கவிதை மற்றும் புதினங்களை எழுதிய வியங்கடேசு மதுல்கரின் இளைய சகோதரராவார் .

கீத ராமாயணம்[தொகு]

கீத ராமாயணம் (பாடல்களில் இராமாயணம் ) என்பது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது. மராத்தியில் வால்மீகி ராமாயணத்தின் ஒரு பாடல் பதிப்பான [4] இது இராமாயணத்தின் நிகழ்வுகளை காலவரிசைப்படி விவரிக்கும் 56 பாடல்களைக் கொண்டுள்ளது. இதற்கு சுதிர் பத்கே இசையமைத்தார். இது வால்மீகியின் காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மதுல்கர் ஒரு வித்தியாசமான கதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து, பாடல் வரிகளை எழிதியதற்காகப் பாராட்டப்பட்டார். இதற்காக இவர் "ஆதுனிக் வால்மீகி" (நவீன வால்மீகி) என்றும் அழைக்கப்பட்டார்.

விருதுகள்[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

மதுல்கர், கோலாப்பூரைச் சேர்ந்த வித்யா என்பவரை மணந்தார் இவர்களுக், சிறீரீதர், ஆனந்த், சரத்குமார் என்ற மூன்று மகன்களும், வர்சா, கல்பலதா, தீபா, சுபாதா என்ற நான்கு மகளகளும் இருந்தனர். பிரபல மராத்தி எழுத்தாளர் வியங்கடேசு மட்கல்கர் இவரது தம்பியாவார். [5]

புனேவில் உள்ள இவரது வீடு (பஞ்சவடி) இவரது ரசிகர்களை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. [6]

மேலும் படிக்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]