கச்வாக குலம்
கச்வாகர் (Kachhwaha) அல்லது குச்வாகர் என்பது இந்தியாவில் முதன்மையாகக் காணப்படும் ஒரு இராஜபுத்திர குலமாகும். [1] [2]
சொற்காரணம்
[தொகு]டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் ஆசிய ஆய்வுகளின் இணை பேராசிரியரான சிந்தியா டால்போட் கச்வாகர் என்ற சொல்லுக்கு ஆமை எனப் பொருள் கூறுகிறார்.[3]
தோற்றம்
[தொகு]கச்வாகர்களின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. அந்த கோட்பாடுகளில் முக்கியமானவை சூரிய குலம் மற்றும் விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தின் வழிவந்தவர்கள் என்று கூறுகின்றன.
சூர்யகுல தோற்றம்
[தொகு]கச்வாகர்கள் தங்களை சூரிய குலம் அல்லது இச்வாகு வம்சம் அல்லது இரகுவம்சம் என கூறிக்கொள்கின்றனர். அயோத்தி இராமர் கோயில் தொடர்பான இந்திய உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மகனான குசனின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.[4] குவாலியரை தனது தலைநகரைக் கொண்ட கச்வாக மன்னன் இசு தேவ்ஜி கி. பி. 967 இல் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமணர்கள் இவரை இசுவாகு வம்சத்தில் பிறந்தவர் என்று கருதுகின்றனர். கச்வாகர்கள் ஆரம்பத்தில் தங்களை "கச்சபகாட்டா", "கச்வாகர்" மற்றும் "கட்சவாகர்" என்று அழைத்தனர். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மான் சிங்கின் ஆட்சியின் போது "கச்சாவா" என்ற சொல் பிரபலமானது. பல்வான், சட்சு, சங்கனேர் மற்றும் ரேவாசா ஆகிய இடங்களில் காணப்பட்டதைப் போல இந்தக் கோட்பாட்டை நிரூபிக்கும் பல கல்வெட்டுகளும் கையெழுத்துப் பிரதிகளும் கிடைத்துள்ளன.[5]
வரலாறு
[தொகு]

துல்கே ராய்
[தொகு]கச்வாகர்கள் 11 ஆம் நூற்றாண்டில் நவீன இராஜஸ்தானின் துந்தர் பிராந்தியத்தில் தங்கள் இராச்சியங்களை நிறுவினார். துல்கே ராய் என்ற ஒருவர் துந்தர் பகுதியின் பெரும்பகுதியை பர்குஜார்களிடமிருந்து கைப்பற்றினார்.[6][7]
ராஜா காகில் தேவ்
[தொகு]துல்கே ராய்க்குப் பிறகு, அவரது மகன் காகில் தேவ் ஆம்பெரின் மீனாவைத் தோற்கடித்து, தனது தலைநகரை ஆம்பெருக்கு மாற்றினார்.[8][9] அவர் துந்தர் பிராந்தியத்தின் அகிர்களை மேத் மற்றும் பைரத் போர்களில் தோற்கடித்து, அவர்களின் பிரதேசங்களை இணைத்துக் கொண்டார். பைரத் என்பது விராட நகரின் சிதைந்த பெயராகும், இந்த நகரம் மகாபாரதத்தில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
ராஜா பஜவான்
[தொகு]ராஜா பஜவான் பிருத்திவிராச் சௌகானின் பெரும்பாலான படையெடுப்புகளில் அவருக்கு உதவினார். மொத்தத்தில், அவர் தனது வாழ்க்கையில் 64 போர்களில் பங்கு கொண்டார். அவர் பிருத்விராச் சௌகானின் உறவினர் ஒருவரை மணந்தார்.[6] முதல் தாரைன் போருக்கு முன்பு அவர் இறந்தார்.
முதலாம் பிருத்விராச் சிங்
[தொகு]கச்வாக மன்னர் முதலாம் பிருத்விராச் சிங், ராணா சங்காவுடன் இணைந்து கான்வா போரில் ஈடுபட்டார்.[6] அவர் பிகானேரைச் சேர்ந்த ராவ் லுன்கர்னாவின் மகளை மணந்தார். அவரது மனைவிகள் ஒன்பது பேரும் 18 மகன்களைப் பெற்றெடுத்தனர். அவரது மகன்களில் ஒருவரான பூர்ணமால், நசிருதீன் உமாயூனின் சகோதரர் ஹிண்டாலுடன் கிபி 1539 இல் நடந்த போரில் இறந்தார்.
மகாராஜா சவாய் ஜெய் சிங் கணிதத்திலும் கட்டிடக்கலையிலும் வானியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன். தில்லி, மதுரா, வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் தனது சொந்த தலைநகரான செய்ப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஜெய் சிங் ஐந்து விண்வெளி ஆய்வுக்கூடங்களைக் கட்டினான். ஜெய்ப்பூரில் இருக்கும் ஆய்வுக்கூடம் மட்டும் இன்றளவும் உள்ளது. இந்திய வானியல் அறிவை முதன்மையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த ஆய்வுக்கூடங்கள் கிரகணங்கள் மற்றும் அவை போன்ற பிற விண்வெளி நிகழ்வுகளைத் துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்டன. ஜெய் சிங்கின் மிகப் பெரிய சாதனை ஜெய்ப்பூர் நகரை கட்டியதே ஆகும் (இந்நகரம் உண்மையில் ஜெய்நகரம் என்று அழைக்கப்பட்டது, சமற்கிருதத்தில் இதன் பொருள் ‘வெற்றியின் நகரம்’ என்பதாகும், பின்னர் 20ம் நூற்றாண்டில் பிரித்தானியரால் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்பட்டது), திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்நகரமே பின்னர் இராஜஸ்தானின் தலைநகரானது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- பிஹரி மால்
- மான் சிங்
- முதலாம் ஜெய் சிங்
- இரண்டாம் ஜெய் சிங்
- முதலாம் மாதோ சிங்
- சவாய் பிரதாப் சிங்
- இரண்டாம் மன்சிங்
- மகாராணி காயத்திரி தேவி
- இளவரசி தியா குமாரி
- புவனேசுவரி குமாரி
- கேத்திரி மன்னர் அஜித் சிங்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Sailendra Nath (2007). Textbook of Indian History and Culture (in ஆங்கிலம்). New Delhi, India, Asia: Macmillan India Limited. p. 167. ISBN 978-1-4039-3200-6.
- ↑ The Rajput Palaces: The Development of an Architectural Style, 1450-1750 p. 88 – "the Kachwaha Rajputs ( who had previously ruled in Gwalior ) established themselves in an adjacent region, founding Dhundar as their capital in 967 AD பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195647303."
- ↑ Talbot, Cynthia (2015). "Imagining the Rajput Past in Mughal–era Mewar". The Last Hindu Emperor: Prithviraj Cauhan and the Indian Past, 1200–2000 (illustrated ed.). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 146–182. doi:10.1017/CBO9781316339893.006. ISBN 9781316339893.
This is a reference to Pajjun's family name, Kachhwaha, which means tortoise
- ↑ Asnani, Rajesh (2019-08-11). "Citing historical documents, Jaipur royals claim to be descendants of Lord Rama". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-01-19.
- ↑ History of Rajasthan by Rima Hooja Section:The Kachwahas of Dhoondhar p. 2 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129108906
- ↑ 6.0 6.1 6.2 Sarkar, Jadunath (1994). A History of Jaipur: C. 1503–1938 (in ஆங்கிலம்). Orient Blackswan. pp. 20–33. ISBN 978-81-250-0333-5.
- ↑ Wink, André (2002). Al-hind: The Making of the Indo-islamic World (in ஆங்கிலம்). BRILL. p. 287. ISBN 978-90-04-09249-5.
- ↑ Jaigarh, the Invincible Fort of Amber. RBSA Publishers, 1990. 1990. p. 18. ISBN 9788185176482.
- ↑ Taknet, D. K.; IntegralDMS (2016-07-07). Jaipur: Gem of India (in ஆங்கிலம்). IntegralDMS. ISBN 978-1-942322-05-4.
மேலும் வாசிக்க
[தொகு]- Bayley C. (1894) Chiefs and Leading Families in Rajputana
- Henige, David (2004). Princely states of India;A guide to chronology and rulers
- Jyoti J. (2001) Royal Jaipur
- Krishnadatta Kavi, Gopalnarayan Bahura(editor) (1983) Pratapa Prakasa, a contemporary account of life in the court at Jaipur in the late 18th century
- Khangarot, R.S., and P.S. Nathawat (1990). Jaigarh- The invincible Fort of Amber
- Topsfield, A. (1994). Indian paintings from Oxford collections
- Tillotson, G. (2006). Jaipur Nama, Penguin books