கச்சினா பொம்மைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கச்சினா பொம்மைகள்
ப்ரூக்ளின் அருங்காட்சியகத்தில் உள்ள 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி கால பொம்மை.
பொதுவான கச்சினா பொம்மை வகைகள்

கச்சினா பொம்மைகள் (Hopi katsina figures (Hopi language: tithu or katsintithu), also known as kachina dolls), என்பவை அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகளாகும். வ ட அமெரிக்காவிலுள்ள அரிசோனாவைச் சேர்ந்த பூர்வகுடி மக்களான ஹோபி மக்கள். இறந்து போன தங்கள் மூதாதையர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காகச் செய்த பொம்மைகள்தான் இந்த கச்சினா பொம்மைகள். இந்தப் பொம்மைகளின் வழியாக மேல் உலகத்திலிருக்கும் முன்னோர்களிடம் பேசி மழையையும் நல்ல அறுவடையையும் வரமாகப் பெறுவதற்காக இந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.[1]

பின்னணி[தொகு]

இந்த பொம்மைகளானது சூலை மாதம் நடுவில் ஒரு சடங்கின் மூலமாக கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. அதை வாங்கிச் செல்லும் குழந்தைகள் தங்கள் வீட்டின் சுவர்களில் தொங்கவிடுகின்றனர். தங்கள் முன்னோர்களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கற்பிக்கக்கூடியதாக இந்தக் கச்சினா பொம்மைகளை இந்த மக்கள் பயன்படுத்தினர். இந்த பொம்மைகளில் மான், கரடி, பசு போன்ற விலங்கு பொம்மைகளும் உண்டு. ஒவ்வொரு கச்சினா பொம்மையின் உருவம், நிறம், வடிவமும் ஹோபி மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாறு, வாழ்க்கை முறையைச் சொல்வதாக உள்ளன. கச்சினா பொம்மையின் கண்களுக்குக் கீழே இரண்டு கோடுகள் வரையப்பட்டிருந்தால் அது வீரன் பொம்மை என்று பொருள்.

வரலாறு[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் மூலம்தான் இவை வெளியுலகுக்கு அவை அறிமுகமாகின. அக்காலத்திய கச்சினா பொம்மைகள் அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து செதுக்கி, மிக எளிய வடிவமைப்பில், தாவரங்களில் இருந்து செய்யப்பட்ட இயற்கையான குறைந்த அளவு வண்ணங்கள் பூசி உருவாக்கப்பட்டன.

1910 முதல் 1930 வரை செய்யப்பட்ட கச்சினா பொம்மைகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன், அந்தக் கால வாழ்க்கையைக் காட்டுவதாக உள்ளன. அதற்குப் பிறகு செய்யப்பட்ட கச்சினா பொம்மைகள் ஆயுதங்களைத் தாங்கியிருந்தன. கை, கால்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்டன. தலைகளில் அபூர்வப் பறவைகளின் சிறகுகளும் அலங்காரமாகச் சூட்டப்பட்டன.[2]

குறிப்புகள்[தொகு]

 1. "Katsina Dolls." Hopi Cultural Preservation Office. 2009. Retrieved 5 Sept 2013.
 2. ஷங்கர் (2018 பெப்ரவரி 28). "பொம்மைகளில் இறங்கும் முன்னோர்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 பெப்ரவரி 2018.

மேற்கோள்கள்[தொகு]

 • Branson, Oscar, T. Hopi Indian Kachina Dolls. Tucson: Treasure Chest Publications, 1992.
 • Bromberg, Eric. The Hopi Approach to the Art of Kachina Doll Carving. West Chester: Schiffer Publishing, 1986.
 • Colton, Harold S. Hopi Kachina Dolls. Albuquerque: University of New Mexico Press. 1959.
 • Earle, Edwin. Hopi Kachinas. New York: Museum of the American Indian Heye Foundation, 1971.
 • Hunt, W. Ben. Kachina Dolls. Milwaukee: Milwaukee Public Museum, 1957.
 • James, Harry C. The Hopi Indians, Their History and their Culture. Caldwell: Caxton Printers, 1956.
 • Loftin, John D. Religion and the Hopi Life. Bloomington: Indiana University Press, 2003.
 • McManis, Kent. A Guide to Hopi Kachina Dolls. Tucson: Rio Nuevo Publishers, 2000.
 • Pecina, Ron and Pecina, Bob. Hopi Kachinas: History, Legends, and Art. Schiffer Publishing Ltd., ISBN 978-0-7643-4429-9978-0-7643-4429-9. 2013.
 • Teiwes, Helga. Kachina Dolls: The Art of Hopi Carvers. Tucson: University of Arizona Press, 1991.
 • Wright, Barton. This is a Hopi Kachina. Flagstaff: The Museum of Northern Arizona, 1965.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சினா_பொம்மைகள்&oldid=2492033" இருந்து மீள்விக்கப்பட்டது