உள்ளடக்கத்துக்குச் செல்

கச்சனீவ்கா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

50°50′12″N 32°39′20″E / 50.83667°N 32.65556°E / 50.83667; 32.65556

கச்சனீவ்கா அரண்மனை
கச்சனீவ்கா அரண்மனை
Map
உக்ரைனின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அசையா நினைவுச்சின்னம்
அலுவல் பெயர்Палацово-парковий комплекс “Качанівка”, (“கச்சனீவ்கா” அரண்மனை, பூங்கா வளாகம்)
வகைவரலாறு, கட்டடக்கலை
உசாவு எண்250045-Н

கச்சனீவ்கா அரண்மனை (Kachanivka Palace, உக்ரைனியன்: Качанівка; உருசியம்: Качановка) என்பது இரண்டாம் கத்தரீனின், சிறிய உருசியாவின் ஆளுநரான பியோத்தர் ரூமியாந்த்சேவ் கட்டிய பல நாட்டுப்புற மாளிகைகளில் ஒன்றாகும். இது உக்ரைனின், செர்னிக்கீவ் மாகாணத்தில் உள்ள பிறிலூக்கி பகுதியில், பெத்துருசீவ்க்கா என்ற கிராமத்திற்கு அருகில் சிமோசு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ரூம்யாந்த்சேவின் மாளிகைகளில் மிகவும் பிரபலமானது கோமல் அரண்மனை ஆகும்.

கச்சனீவ்கா இல்லம் 1770-களில் காரல் பிளாங்க் என்பவரால் புதிய-மரபுவழி வடிவமைப்புகளில் கட்டப்பட்டது. இங்குள்ள தேவாலயம், ஆரஞ்சுத் தோட்டம், பறவைக்கூடம், நீர்த்தேக்கக் கோபுரம், ஏனைய பல கட்டடங்கள் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[1] பியோத்தரின் தந்தை நிக்கோலாய் ரூமியாந்த்சேவின் மரணத்திற்குப் பிறகு, இந்தச் சொத்து கொசாக் இசுதார்சீனா வம்சாவளியைச் சேர்ந்த தார்னோவ்சுக்கி குடும்பத்திற்குச் சென்றது. வசீல் தார்னோவ்சுக்கி உக்ரைனின் வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தார், உக்ரைனின் இராணுவத் தளபதிகளுக்குச் சொந்தமான ஆயுதங்களின் தொகுப்பை அவர் சேகரித்தார். கச்சனீவ்காவிற்கு 19 ஆம் நூற்றாண்டில் வருகை தந்தவர்களில் நிகோலாய் கோகோல், தாராசு சேவ்சென்கோ, இலியா ரேப்பின், மிக்கைல் வுரூபெல், மைக்கைல் கிளங்கா போன்ற பிரபலங்கள் அடங்குவர்.[1]

சோவியத்துகள் இந்த அரண்மனையை ஒரு குற்றவாளிகளின் குடியேற்ற நிலமாகவும், காசநோய் மருத்துவமனையாகவும் பயன்படுத்துவதற்காக தேசியமயமாக்கிய போதிலும், விரிவான ஆங்கிலப் பூங்கா, பல துணை வெளிக்கட்டடங்கள் உட்பட இந்த மாளிகை விதிவிலக்காக நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.[1] இது 1982 முதல் ஒரு தேசிய கலாச்சாரப் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் உக்ரைனின் ஏழு அற்புதமான கோட்டைகள் அல்லது அரண்மனைகளில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சனீவ்கா_அரண்மனை&oldid=4628559" இலிருந்து மீள்விக்கப்பட்டது