கச்சத்தீவு உரிமைச் சிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதபுரம் அரசருக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதை அடுத்து இத்தீவு பற்றிய உரிமை தமிழக அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கச்சத்தீவை மீட்டு இந்தியாவின் பகுதியாக உரிமை நிலைநாட்டிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைக்க வழியுறுத்தி பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இந்திய அரசு உச்சநீதி மனறத்தில் கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து தரவில்லை என உறுதிமொழி வழங்கியுள்ளது.[1]

தற்போதைய முதல்வர் செ. செயலலிதா அவர்கள் கச்சத்தீவை இலங்கைக்கு "தாரைவார்த்தது" சட்டப்படி தவறு என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அறமன்றம் இந்திய ஒன்றிய அரசிற்கு தாக்கீது அனுப்பியது. தற்போது திமுக தலைவர் கருணாநிதி டெசோ அமைப்பின் தீர்மானப்படி கச்சத்தீவை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் படி விட்டுக் கொடுத்ததை ரத்து செய்து இந்தியா திரும்ப்ப் பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.[2]

இதனையடுத்து முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியுள்ளார். அதில் "தனது ஆட்சிக் காலத்தில் தடுத்து நிறுத்தாமல் இருந்துவிட்டு தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.[3]

சட்டமன்றத்தில் தீர்மானம்[தொகு]

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு வருவாய்த்துறையையும் சேர்க்கவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூன் 13, 2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[4]

தன் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.[5]

மேற்கண்ட தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்து "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி" என்று சட்டமன்றத்தில் பேசினார்.[6]

இன்னொரு தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் செயலலிதாவால் மே 3, 2013 அன்று கச்சத்தீவை மீட்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.[7] அத்தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி மீது சரமாரியாக குற்றம் சாட்டினார்.[4]

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kachchatheevu was not ceded to Sri Lanka, Centre tells court
  2. "கச்சத் தீவை மீட்கக் கோரி கருணாநிதி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்". தினமணி. சூலை 16, 2013. http://dinamani.com/india/2013/07/16/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1686088.ece. பார்த்த நாள்: சூலை 18, 2013. 
  3. "கச்சத் தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்கள்: பட்டியலிட்டு முதல்வர் கடும் விமர்சனம்". தினமணி. சூலை 18, 2013. http://dinamani.com/latest_news/2013/07/18/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/article1689103.ece. பார்த்த நாள்: சூலை 18, 2013. 
  4. 4.0 4.1 "கச்சத்தீவு காவு: கருணாநிதி மீது முதல்வர் குற்றசாட்டு". தினபூமி. மே 4, 2013. http://www.thinaboomi.com/2013/05/03/21796.html. பார்த்த நாள்: சூலை 19, 2013. 
  5. "கச்சத்தீவு தீர்மானம் மகிழ்ச்சி; என் மீது விமர்சனக்கணைகளை வீசத்தான் இந்த தீர்மானம் :கலைஞர்". நக்கீரன். 14, ஜூன் 2011 இம் மூலத்தில் இருந்து 2011-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110812013605/http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=55993. பார்த்த நாள்: சூலை 19, 2013. 
  6. "வழக்கிற்கு பயந்தே கச்சத்தீவை தாரை வார்த்தார் கருணாநிதி : விஜயகாந்த்". தினமணி. 10, ஜூன் 2011. http://dinamani.com/tamilnadu/article773384.ece. பார்த்த நாள்: சூலை 19, 2013. 
  7. "கச்சத் தீவை மீட்க பேரவையில் தீர்மானம்". தினமணி. மே 4, 2013. http://dinamani.com/tamilnadu/2013/05/04/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article1574293.ece. பார்த்த நாள்: சூலை 19, 2013.