உள்ளடக்கத்துக்குச் செல்

கசோரா விட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசோரா விட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கெசுபெரிடே
பேரினம்:
கசோரா
இனம்:
H. விட்டா
இருசொற் பெயரீடு
கசோரா விட்டா
(பட்லர், 1870)[1]

கசோரா விட்டா,(Hasora vitta) வெற்று வரிகளுடைய தாவி, [2][3][4] எனும் பட்டாம்பூச்சி [3] [4] தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. [5]

விளக்கம்

[தொகு]

இந்தப் பட்டாம்பூச்சியின் இறக்கை அளவானது 45 முதல் 55 மிமீ வரை உள்ளது. இறக்கை அடர் பழுப்பு வண்ணத்தில் காணப்படும். இது பொதுவான வரிகளுடைய தாவிகளை (ஹசோரா குரோமஸ் ) ஒத்திருக்கிறது. ஆனால் பின் இறக்கையின் வெளிப்புறமாக அடிப்பக்கத்தில் பரந்த வெள்ளை பட்டை இதில் காணப்படும். மேலும் இதன் இறக்கைகள் பளபளப்பாக உள்ளன.[6][7]

பிற வேறுபாடுகள்:

ஆண்: முன் இறக்கையின் மேற்பகுதியில் ஓர் புள்ளிக் காணப்படும். சில நேரங்களில் ஒன்றுக்குப் பதில் மூன்று புள்ளிகள் இருக்கும். முன் இறக்கையின் மேற்பகுதியில் எந்த பட்டைகளும் இல்லை. [6]

பெண்: பெண் பட்டாம்பூச்சியின் இறக்கையில் காணப்படும் புள்ளியானது பெரியதாகவும் கூடுதலாக இரண்டு புள்ளிகளும் காணப்படும். [6]

வகைபாட்டியல்

[தொகு]

பட்டாம்பூச்சிக்கு இரண்டு துணைச்சிற்றினங்கள் உள்ளன:

சரகம்

[தொகு]

இந்தியாவில் தெற்கில் (கனாரா), சிக்கிம், அசாம் [2] மற்றும் மியான்மர் கிழக்கு, தாய்லாந்து, சீனாவின் மேற்கு, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பொதுவான பட்டைத் தாவிகள் காணப்படுகிறது. [4][8]

நிலை

[தொகு]

எவன்ஸ் (1932) கருத்தின்படி இவை அரிதானது வகையினைச் சார்ந்தது அல்ல.[8] வின்டர்-பிளைத் (1957) கூற்றின்படி பொதுவானதல்ல எனப் பட்டியலிடப்படுகிறது.[6]

உணவுத் தாவரங்கள்

[தொகு]

இதனுடைய கம்பளிப்பூச்சிகள் டெரிசு இனங்கள், புங்கை இனங்கள், மில்லெட்டிய எக்சுடென்சா, எண்டோசமாரா ரேசிமோசா, மில்லெட்டிய கிளாப்ரா மற்றும் சபதொபசு பெருகினெசு முதலிய தாவரங்களை உணவாக உண்ணுகின்றன. [4][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:LepIndex Retrieved April 20, 2018.
  2. 2.0 2.1 R.K., Varshney; Smetacek, Peter (2015). A Synoptic Catalogue of the Butterflies of India. New Delhi: Butterfly Research Centre, Bhimtal & Indinov Publishing, New Delhi. p. 26. எண்ணிம ஆவணச் சுட்டி:10.13140/RG.2.1.3966.2164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-929826-4-9.
  3. 3.0 3.1 TOL web page on genus Hasora பரணிடப்பட்டது 2020-10-14 at the வந்தவழி இயந்திரம்
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Markku Savela's website on Lepidoptera - page on genus Hasora.
  5. W. H., Evans (1949). A Catalogue of the Hesperiidae from Europe, Asia, and Australia in the British Museum. London: British Museum (Natural History). Department of Entomology. p. 68.
  6. 6.0 6.1 6.2 6.3 Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170192329.
  7. Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. p. 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173713545.
  8. 8.0 8.1 8.2 8.3 Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society. p. 315, ser no I 1.13.
  9. Ravikanthachari Nitin; V.C. Balakrishnan; Paresh V. Churi; S. Kalesh; Satya Prakash; Krushnamegh Kunte (2018-04-10). "Larval host plants of the buterfies of the Western Ghats, India". Journal of Threatened Taxa 10 (4): 11495–11550. doi:10.11609/jott.3104.10.4.11495-11550. http://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/3104/4402. 

குறிப்புகள்

[தொகு]

அச்சில்

  • Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
  • Kunte, Krushnamegh (2000). Butterflies of Peninsular India. India, A Lifescape. Hyderabad, India: Universities Press. ISBN 978-8173713545.
  • Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. ISBN 978-8170192329.

இணையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசோரா_விட்டா&oldid=3623439" இலிருந்து மீள்விக்கப்பட்டது