கசுரோ வடானபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கசுரோ வடானபே (Kazuro Watanabe, பிறப்பு: மே 1, 1955) என்பவர் ஒரு சப்பானியப் பொழுதுபோக்கு வானியல் வல்லுநர். அவர் சப்பானின் ஹொக்கைடோ தீவில் பிறந்தார். சப்பானிய வானியல் சார் சமூகம் மற்றும் கீழைத்தேய வானியல்சார் சங்க உறுப்பினரும் ஆவார்.

பதிப்புகள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன், இவர் ஐநூறுக்கும் மேல் சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1]. "அஸ்டேரோயிட் ஹன்டர், "செலேசடியல் பாடி போடோகிரபி மானுவல்", "தி செலேசடியல் ஸ்கை ஆப் அவர் டிரீம்ஸ்" மற்றும் பல சப்பானிய பதிப்புகளை எழுதியுள்ளார். "மாதாந்த வானியல் கையேடு" எனும் சப்பானிய வெளியீட்டிற்கு பங்களிக்கிறார்.

இவர் நினைவாக 4155 வடானபே எனும் ஓர் சிறுகோள்க்கு பெயர் சூட்டப்பட்டது.[2]

கசுரோ வடானபே பெயரிட்ட சில சிறுகோள்கள்[தொகு]

  • 5214 ஊசொரா
  • டகொயகி
  • குரோடா
  • மமியா - எடோ காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற துப்பறிவாளர் மமியா ரின்சோ என்பவரின் பெயர் சூட்டப்பட்ட சிறுகோள்.
  • டெண்டைகொஜோ - சப்போரோ எனும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தின் பெயர் சூட்டப்பட்ட சிறுகோள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Planet Discoverers". IAU Minor Planet Center (2010-01-30). பார்த்த நாள் 2010-07-06.
  2. Schmadel, Lutz D. (2003). Dictionary of minor planet names. Springer. p. 355. ISBN 3-540-00238-3. http://books.google.co.uk/books?id=KWrB1jPCa8AC&dq=. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுரோ_வடானபே&oldid=1866601" இருந்து மீள்விக்கப்பட்டது