கசுன் ரஜிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரசேகர அராச்சிலகே கசுன் ரஜிதா, பொதுவாக (Chandrasekara Arachchilage Kasun Rajitha, பிறப்பு 1 ஜூன் 1993) கசுன் ராஜிதா என அறியப்படும் இவர் தொழில்முறை இலங்கை துடுப்பாட்ட அணியின்வீரர் ஆவார், இவர் இலங்கைக்காக சர்வதேச அளவில் தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.[1]

ஆரம்ப கால மற்றும் உள்நாட்டு வாழ்க்கை[தொகு]

இவர் ஆகஸ்ட் 2015 இல் இலங்கை வாரியத் தலைவரின் லெவன் மற்றும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணிக்கு இடையிலான சுற்றுப்பயணத்தில் விளையாடினார்.[2] மார்ச் 2018 இல், இவர் 2017–18 சூப்பர் நான்கு மாகாண போட்டித் தொடரில் இவர் கண்டியின் அணியில் இடம் பெற்றார் .[3][4]

அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 10 இழப்புகளை கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இலக்குகளை கைப்பற்றிய கண்டி பந்து வீச்சாளர்களில் முதலிடம் பெற்றார்.[5] அதற்கு அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டியின் அணியிலும் இவர் இடம் பெற்றார் .[6]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற எஸ்.எல்.சி டி 20 லீக்கில் இவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக இவர் இடம் பெற்றார். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 13 இலக்குகளைை கைப்பற்றினார். இதன் மூலம் அதிக இலக்குகளை கைப்பற்றிய காலி துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[7] மார்ச் 2019 இல், 2019 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டி அணியில் இடம் பெற்றார் .[8]

சர்வதேச வாழ்க்கை[தொகு]

இவர் பிப்ரவரி 9, 2016 அன்று இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கை அணி சார்பாக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் (டி 20 ஐ) அறிமுகமானார்.[9] இவர் தனது முதல் ஓவரில் இரண்டு இந்திய முதன்மைத் துடுப்பாட்ட வீரர்களின் இலக்குகளை வீழ்த்தினார். இலங்கை துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய துடுப்பாட்ட அணி 101 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்தது.

இந்தப்போட்டியில் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இழப்புகளை கைப்பற்றினார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் 1-0 எனும் புள்ளி கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. மேலும் பன்னாட்டு 20 20 ஐசி சி தரவரிசையில் இலங்கை அணி முதலிடம் பிடித்தது.[10]

2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலக்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூன் 14, 2018 இல் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். கிரெய்க் பிராத் வெய்ட் என்பவரின் இலக்கினை தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இலக்காகக் கைப்பற்றினார்.

குறிப்புகள்[தொகு]

ஜூலை 2018 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார்.[11] 1 ஆகஸ்ட் 2018 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[12] குயின்டன் டி கோக்கை ஆட்டமிழக்கச் செய்து தனது முதல் ஒருநாள் விக்கெட்டை எடுத்தார்.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுன்_ரஜிதா&oldid=2867796" இருந்து மீள்விக்கப்பட்டது