கசுதி கொத்தமல்லி
| கசுதி கொத்தமல்லி (कास्ती कोथिंबीर) | |
|---|---|
| குறிப்பு | கசுதி கொத்தமல்லி-மகாராட்டிரம் |
| வகை | கொத்தமல்லி |
| இடம் | லத்தூர் மாவட்டம் |
| நாடு | இந்தியா |
| பதிவுசெய்யப்பட்டது | 30 மார்ச் 2024 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | ipindia.gov.in |
கசுதி கொத்தமல்லி (Kasti Coriander) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் பயிரிடப்படும் ஒரு வகை கொத்தமல்லி ஆகும். இது லாத்தூர் மாவட்டத்தின் அவுசா வட்டத்திலுள்ள ஆசிவ் கிராமத்தில் பொதுவாகவும் பரவலாகவும் பயிரிடப்படும் பயிராகும்.[1]
இதன் புவியியல் குறியீட்டு குறிச்சொல்லின் கீழ், இது "கசுதி கொத்தமல்லி" என்று குறிப்பிடப்படுகிறது.
பெயர்
[தொகு]மராத்தி உள்ளூர் மாநில மொழியில் கசுதி கொத்திம்பிர் என்று கசுதி கொத்தமல்லி அழைக்கப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]ஆசிவ் கிராமமும் இதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆசுதா வட்டத்தில் தரமான கொத்தமல்லி சாகுபடிக்கு பெயர் பெற்றவை.[3] ஆண்டுதோறும் 150-175 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இந்த பயிர் இதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவைக்காக மிகவும் விரும்பப்படுகிறது. இது சந்தையில் ஒரு மதிப்புமிக்க பொருளாக அமைகிறது.[4][5]
புவிசார் குறியீடு
[தொகு]கசுதி கொத்தமல்லி 30 மார்ச் 2024 அன்று இந்திய மத்திய அரசின் கீழ் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவேட்டில் புவியியல் குறியீடு நிலையினைப் பெற்றது. இது 6 பிப்ரவரி 2032 வரை செல்லுபடியாகும்.[6]
அவுசாவைச் சேர்ந்த கசுதி கொட்டிம்பீர் சேத்காரி உட்பதக் சங்கம், கசுதி கொத்தமல்லியின் புவிசார் குறியீடு பதிவை முன்மொழிந்தது. பிப்ரவரி 2022இல் விண்ணப்பத்தை தாக்கல் செய்த பிறகு, கசுதி கொத்தமல்லி 2024இல் சென்னையில் உள்ள புவியியல் அடையாளப் பதிவேட்டால் புவிசார் குறிச்சொல்லை வழங்கியது. இதன்மூலம் மகாராட்டிராவிலிருந்து புவியியல் குறியீடு குறிச்சொல்லைப் பெற்ற 46ஆவது வகைப் பொருட்களாக இது மாறியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "वैशिष्ट्यपूर्ण उत्पादनांना ‘जीआय टॅग’; कवडीमाळ, कास्ती कोथिंबिरीला मिळणार प्रमाणपत्र" (in mr). Maharashtra Times. https://marathi.indiatimes.com/maharashtra/pune-news/kavadimal-and-kasti-coriander-will-get-gi-tag-certificate/articleshow/98579566.cms.
- ↑ "अलिबागचा कांदा, नंदुरबारची मिरची अन् काष्टीची कोथिंबीर; १२१ शेतमालाला नामांकन" (in mr). Lokmat. 19 February 2022. https://www.lokmat.com/maharashtra/alibag-onion-nandurbar-chilli-and-kashti-cilantro-nomination-for-121-agricultural-products-a629/.
- ↑ "Latur's patadi chinch, Borsuri tur dal, Kasti coriander get GI tags". ThePrint. 8 December 2023. https://theprint.in/india/laturs-patadi-chinch-borsuri-tur-dal-kasti-coriander-get-gi-tags/1878511/.
- ↑ "लातूर जिल्ह्यातील आशिवच्या कास्ती कोथिंबीरला जीआय मानांकन" (in mr). Lokmat. 5 December 2023. https://www.lokmat.com/latur/aashivs-kasti-coriander-from-latur-district-got-gi-rating-a-a660-c320/.
- ↑ "6 items from M’wada, Pen’s Ganesh idols get GI tag". The Times of India. 5 December 2023. https://timesofindia.indiatimes.com/city/aurangabad/6-items-from-mwada-pens-ganesh-idols-get-gi-tag/articleshow/105741715.cms.
- ↑ "अलिबागचा पांढरा कांदा, नंदुरबारची मिरची; काष्टीची कोथिंबीर जाणार सातासमुद्र" (in mr). Zee 24 taas. 19 February 2022. https://zeenews.india.com/marathi/maharashtra/gi-rating-to-alibag-white-onion-nandurbar-chilli-and-kashti-cilantro/607733.