கசுக்கொட்டை வெண்வயிறு எலி
கசுக்கொட்டை வெண்வயிறு எலி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | கொறிணி
|
குடும்பம்: | |
பேரினம்: | நிவிவென்டர்
|
இனம்: | நி. புல்வெசென்சு
|
இருசொற் பெயரீடு | |
நிவிவென்டர் புல்வெசென்சு கிரே, 1847 | |
![]() |
கசுகொட்டை வெண்வயிறு எலி (Chestnut white-bellied rat)(நிவிவென்டர் புல்வெசென்சு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினம் ஆகும். இது ஒரு தனித்துவமான பிரகாசமான கசுக்கொட்டை நிற மேற்தோலினையும் வெண்ணிற கீழ்-தோலினையும் கொண்ட சிறிய எலி ஆகும். மேல் தோலின் நிறம் மிகவும் பிரகாசத்திலிருந்து மந்தமான பழுப்பு வரை மாறுபடும். உடலின் பக்கமானது மேல் மற்றும் கீழ்த்தோல் சந்திக்கும் தனித்துவமான விளிம்பைக் கொண்டுள்ளது. வால் மேற்புறம் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும்; அதே சமயம் அடிப்பகுதி வெண்மை முதல் சதை நிறத்தில் இருக்கும். இந்த இனம் பெரும்பாலும் தொந்தரவு மற்றும் இடையூறு இல்லாத வன வாழ்விடங்களில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் கிழக்கு இமயமலையின் காடுகளில் விதைகளைப் பதுக்கி வைப்பதாக அறியப்படுகிறது.[2]
இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Niviventer fulvescens
- ↑ Sidhu, Swati; Datta, Aparajita (2015-08-06). "Tracking Seed Fates of Tropical Tree Species: Evidence for Seed Caching in a Tropical Forest in North-East India". PLOS ONE 10 (8): e0134658. doi:10.1371/journal.pone.0134658. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:26247616. Bibcode: 2015PLoSO..1034658S.
- முஸ்ஸர், ஜி., லுண்டே, டி., அப்லின், கே. & மோலூர், எஸ்.2008. நிவிவென்டர் ஃபுல்வெசென்ஸ் . 2008 IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 9 ஜூன் 2009 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.