உள்ளடக்கத்துக்குச் செல்

கசானித்து இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசானித்துகள்
الغساسنة
220–638
நிலை பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசு
தலைநகரம்ஜபியா
பேசப்படும் மொழிகள்பழைய அரபு மொழி
சமயம்
கிறித்தவம் (அதிகாரப்பூர்வ சமயம்)[1]
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• 220–265
ஜாப்னா இப்னு அமீர் (முதல்)
• 632–638
ஜாபாலா இப்னு அல்-அய்காம் (இறுதி)
வரலாறு 
• தொடக்கம்
220
• லெவண்ட் மீதான முஸ்லீம்களின் படையெடுப்பு
638
முந்தையது
பின்னையது
சாலிகித்துகள்
ராசிதீன் கலீபாக்கள்
பண்டைய அண்மை கிழக்கில் கிபி 565ல் கசானித்து இராச்சியம் மற்றும் அருகமைந்த இராச்சியங்களும், பேரரசுகளும்
கசானித்து இராச்சியம் (கிபி 220–638)
கசானித்துகளின் போர்க் கொடியில் புனித செர்கியூசின் படம்
லெவண்ட் பகுதியில் கசானித்து இராச்சியத்தின் வரைபடம்

கசானித்துகள் (Ghassanids), தெற்கு அரேபியாவில் வாழ்ந்த அரேபிய இனக்குழுவினர் ஆவார். கசானித்துகள், கிபி 3ஆம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியில் குடியேறி, பைசாந்தியப் பேரரசின் கீழ் சிற்றரசை நிறுவினர். [2]எலனியக் காலத்தில் கசானித்துகள் உள்ளுர் சால்டிய கிறித்தவர்களுடன் கலந்து கிறித்தவ சமயத்தைப் பின்பற்றினர்.[3] ரோம-பாரசீகப் போர்களில் கசானித்துகள், பைசாந்தியர்களுக்கு ஆதரவாக, சாசானியப் பேரரசை எதிர்த்துப் போரிட்டனர்.[4]

ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்த கசானித்துகள், 638ஆம் ஆண்டில் ராசிதீன் கலீபாக்களால் வீழ்த்தப்பட்டனர். இதனால் கசானித்துகளில் சில குழுவினர் இசுலாமிய சமயத்தில் சேர்ந்தனர். பெரும்பாலான கசானித்துகள் மெல்கைட்டு மற்றும் சிரியாக் கிறிஸ்தவர்களைப் பின்பற்றினர். இம்மக்கள் தற்கால சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலத்தீனம் மற்றும் லெபனான் நாடுகளில் வாழ்கின்றனர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maalouf, Tony (2005). Arabs in the Shadow of Israel: The Unfolding of God's Prophetic Plan for Ishmael's Line. Kregel Academic. p. 23. ISBN 9780825493638.
  2. 2.0 2.1 Bowersock, G. W.; Brown, Peter; Grabar, Oleg (1998). Late Antiquity: A guide to the Postclassical World. Harvard University Press. ISBN 9780674511705. Late Antiquity - Bowersock/Brown/Grabar.
  3. "Deir Gassaneh".
  4. Ghassanid dynasty

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசானித்து_இராச்சியம்&oldid=4145569" இலிருந்து மீள்விக்கப்பட்டது