உள்ளடக்கத்துக்குச் செல்

கசானா நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசானா நேசனல்
Khazanah Nasional Berhad
வகைஅரசு சார்ந்த நிறுவனம்
நிறுவுகை3 செப்டம்பர் 1993
தலைமையகம் கோலாலம்பூர்,  மலேசியா
முதன்மை நபர்கள்
வருமானம்
  • MYR 7.81 பில்லியன் (2023)
  • MYR 8.02 பில்லியன் (2022)
இயக்க வருமானம்
  • Increase MYR 5.89 பில்லியன் (2023)
  • MYR 1.63 பில்லியன் (2022)
நிகர வருமானம்
  • Increase MYR 4.95 பில்லியன் (2023)
  • MYR 0.97 பில்லியன் (2022)
மொத்தச் சொத்துகள்
  • Increase MYR 93.92 பில்லியன் (2023)
  • MYR 86.82 பில்லியன் (2022)
மொத்த பங்குத்தொகை
  • Increase MYR 42.74 பில்லியன் (2023)
  • MYR 36.72 பில்லியன் (2022)
உரிமையாளர்கள்மலேசிய அரசாங்கம்
பணியாளர்353 (2022)
தாய் நிறுவனம்மலேசிய நிதி அமைச்சு
உள்ளடக்கிய மாவட்டங்கள்
இணையத்தளம்www.khazanah.com.my

கசானா நேசனல் (மலாய்; ஆங்கிலம்: Khazanah Nasional அல்லது Khazanah Nasional Berhad) என்பது மலேசிய அரசு சார்ந்த நிதி நிறுவனமாகும்.[2] உலகின் மிகப்பெரிய அரசு நிதி நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த நிறுவனம், மலேசியாவின் உபரி வருமானத்தை முதலீடு செய்வதற்காக நிறுவப்பட்டது.[3][4]

இந்த நிறுவனத்தின் முதலீடுகள்; மற்றும் செயல்பாடுகளின் வழியாக, நாட்டிற்கு நிலையான பொருளாதாரம்; மற்றும் சமூக நன்மைகள் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் நீண்டகால இடர்-சரிசெய்யப்பட்ட வருமானத்தைப் பெறுவது; புதிய வளர்ச்சிப் பகுதிகளை ஊக்குவிக்கும் முதலீடுகளை மேற்கொள்வது; மலேசியாவின் பொருளாதாரப் போட்டித் தன்மையை வலுப்படுத்துவது; மற்றும் சமூகப் பொருளாதாரச் செயல்பாடுகளில் பங்களிப்பது போன்றவையும் அடங்கும்.[5]

கோலாலம்பூரில் தலைமையகத்தைக் கொண்ட இந்த நிறுவனம், அமெரிக்கா, துருக்கி, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[6] கசானா நேசனல் நிதியத்தின் முதலீடு பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. கேளிக்கை சுற்றுலாத் துறை, வங்கித் துறை, பொதுநலத்துறை மற்றும் நுகர்வோர் துறை போன்றவை; இந்த நிறுவனம் கவனம் செலுத்தும் முக்கியமான முதலீட்டுத் துறைகளாகும்.[7]

திசம்பர் 2024-இல், இந்த நிதிய நிர்வாகம் US$36 பில்லியன் சொத்துக்களைக் கொண்டிருந்தது.[8][9] கசானா நேசனல் என்பது அரசாங்கத்தின் அதிகப்படியான நிதியிலிருந்து பணத்தை நிர்வகிக்கும் இரண்டு மலேசிய அரசாங்க முதலீட்டு நிறுவனங்களில் (Government-Linked Investment Companies) ஒன்றாகும்.[10]

நிலைப்பாடு

[தொகு]

கசானா நேசனல் என்பது மலேசிய அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். மேலும் இந்த நிறுவனம் மலேசிய நிறுவனங்கள் சட்ட விதிகளின் கீழ் செயல்படுகிறது.[11][12] இது ஓர் அரசு நிறுவனமோ அல்லது சட்டப்பூர்வ வாரியமோ அல்ல; மாறாக இது அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக சொத்துக்களை நிர்வகிக்கும் நிறுவனம்; மற்றும் பல உயர்த் தொழில்நுட்ப உத்திசார் துறைகளில் முதலீடு செய்வதில், அறங்காவலராகச் செயல்படும் ஒரு தேசிய நிறுவனமாகும்.[13][14]

மற்ற முதலீட்டு நிறுவனங்களைப் போல் அல்லாமல், கசானா நேசனல் தனது முதலீடுகளையும் சொத்துக்களையும் மலேசிய நடுவண் வங்கியிடம் விற்கும் நிறுவனம் அல்ல. மாறாக மத்திய அரசுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. சிங்கப்பூர் நாட்டின் நிதி நிறுவனமான தெமாசெக் ஓல்டிங்ஸ் (Temasek Holdings) நிறுவனத்தைப் போலவே, கசானா நேசனல் நிறுவனமும் அதன் சொந்த இயக்குநர்கள் குழுவையும்; தொழில்முறை நிர்வாகக் குழுவையும் கொண்டுள்ளது.[15]

கசானா நேசனல் தலைவராக மலேசியப் பிரதமர் பொறுப்பு வகிக்கிறார். கசானாவின் இயக்குநர்கள் குழு; ஏற்கனவே உள்ள நிர்வாக உறுப்பினர்களை மீண்டும் நியமித்தல்; மற்றும் அவர்களைத் தக்கவைத்தல் போன்ற முடிவெடுக்கும் உரிமைகள் அவருக்கு வழஙப்பட்டுள்ளன.[16]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Khazanah appoints Dato' Amirul Feisal Wan Zahir as Managing Director". Khazanah Nasional. 29 June 2021. https://www.khazanah.com.my/news_press_releases/khazanah-appoints-dato-amirul-feisal-wan-zahir-as-managing-director/. பார்த்த நாள்: 23 April 2022. 
  2. Zuraimi Abdullah (23 March 2023). "Is Khazanah Nasional's star dimming?". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2023/03/891887/khazanah-nasionals-star-dimming. பார்த்த நாள்: 19 April 2023. 
  3. Jikon Lai (29 March 2012). "Khazanah Nasional: Malaysia's treasure trove". Journal of the Asia Pacific Economy (Taylor & Francis Online) 17 (2): 236–252. doi:10.1080/13547860.2012.668023. https://www.tandfonline.com/doi/abs/10.1080/13547860.2012.668023?journalCode=rjap20. பார்த்த நாள்: 23 April 2017. 
  4. Usman Hayat (30 July 2013). "Malaysia's Khazanah: Not Just a SWF But a "Nation Building Institution"". CFA Institute. https://blogs.cfainstitute.org/investor/2013/07/30/malaysias-khazanah-not-just-a-swf-but-a-nation-building-institution/. பார்த்த நாள்: 23 April 2018. 
  5. "Khazanah continues growing its portfolio value, announces long-term strategies towards Advancing Malaysia". Khazanah Nasional. 2 March 2022. https://www.khazanah.com.my/news_press_releases/khazanah-continues-growing-its-portfolio-value-announces-long-term-strategies-towards-advancing-malaysia/. பார்த்த நாள்: 23 April 2022. 
  6. "Khazanah's investments in the United States". Khazanah Nasional. 15 September 2017. https://www.khazanah.com.my/news_press_releases/khazanahs-investments-in-the-united-states/. பார்த்த நாள்: 29 May 2018. 
  7. "Moody's, S&P assign Khazanah inaugural issuer credit rating of A3, A-". The Vibes. 27 April 2023. https://www.thevibes.com/articles/business/91312/moodys-sp-assign-khazanah-inaugural-issuer-credit-rating-of-a3-a. பார்த்த நாள்: 3 June 2023. 
  8. International Forum of Sovereign Wealth Funds. "IFSWF Our members". Archived from the original on 27 September 2016. Retrieved 24 September 2016.
  9. "Khazanah Nasional (Khazanah) - Sovereign Wealth Fund, Malaysia - SWFI". www.swfinstitute.org. Retrieved 2023-06-27.
  10. Royce Tan (5 April 2019). "EPF, PNB not GLCs; only Khazanah, KWAP are: Shahril". The Star (Malaysia). https://www.thestar.com.my/business/business-news/2019/04/05/khazanah-ceo-glic-needs-redefining. பார்த்த நாள்: 18 July 2019. 
  11. Ahmed Razman Abdul Latiff (28 July 2018). "Menunggu hala tuju baharu Khazanah". Berita Harian. https://www.bharian.com.my/rencana/muka10/2018/07/454856/menunggu-hala-tuju-baharu-khazanah. பார்த்த நாள்: 26 May 2019. 
  12. Hazwan Faisal Mohamad (27 July 2018). "Khazanah cemerlang laksana mandat kerajaan". Berita Harian. https://www.bharian.com.my/bisnes/korporat/2018/07/454219/khazanah-cemerlang-laksana-mandat-kerajaan. பார்த்த நாள்: 26 May 2019. 
  13. Mahanum Abdul Aziz; Che Wan Badrul Alias; Hazwan Faisal Mohamad (5 April 2019). "'Khazanah bukan institusi Bumiputera'". Berita Harian. https://www.klik.com.my/item/story/14577325/-khazanah-bukan-institusi-bumiputera-. பார்த்த நாள்: 26 May 2020. 
  14. Ooi Tee Ching (5 April 2019). "Khazanah plays catalyst role in economic development, says Sheriff". Business Times (New Straits Times). https://www.klik.com.my/item/story/14636765/khazanah-plays-catalyst-role-in-economic-development-says-sheriff. பார்த்த நாள்: 26 May 2020. 
  15. "Better management of MoF functions". New Straits Times. 21 April 1994. https://www.klik.com.my/item/story/866652/better-management-of-mof-functions. பார்த்த நாள்: 23 April 2022. 
  16. Ahmad Suhael Adnan (26 July 2018). "PM tentukan hala tuju Khazanah" (in ms). Berita Harian. https://www.bharian.com.my/berita/nasional/2018/07/454096/pm-tentukan-hala-tuju-khazanah. பார்த்த நாள்: 26 May 2019. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசானா_நேசனல்&oldid=4438552" இலிருந்து மீள்விக்கப்பட்டது