கசட தபற

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசட தபற
இயக்கம்சிம்புதேவன்
தயாரிப்புவெங்கட் பிரபு
ஆர். ரவீந்திரன்
கதைசிம்புதேவன்
இசை
நடிப்பு
ஒளிப்பதிவு
படத்தொகுப்பு
கலையகம்பிளாக் டிக்கெட் கம்பெனி
டிரைடென்ட் ஆர்ட்ஸ்
விநியோகம்Sony Liv
வெளியீடுஆகத்து 27, 2021 (2021-08-27)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கசட தபற (Kasada Thapara) என்பது 2021இல் வெளியான தமிழ் மொழியில் வெளியான திரைப்படமாகும். இதை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனியும் ஆர் ரவீந்திரனின் திரிசூலம் ஆர்ட்ஸ் நிறுவனமும் கூட்டாகத் தயாரித்திருந்தன. படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 27 ஆகஸ்ட் 2021 அன்று சோனி Livல் ஒளிபரப்பப்பட்டது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 6 தொகுப்புகளைப் போலவே படத்தின் பெயரும் 6 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

"கசட தபற" என்ற பெயரில் சிம்பு தேவன் இயக்குவதாக நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனமும், ஆர்.ரவீந்திரனின் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.[2] சிம்பு தேவன் திரைப்படம் ஒரு தொகுப்பு அல்ல என்று கூறினார். ஆனால் ஆறு இயக்குனர்கள், ஆறு படத் தொகுப்பாளர்கள், ஆறு இசை இயக்குனர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவுடன் ஆறு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு கதையை கொண்ட படமாக இருந்தது.[3] [4] [5] [6]

இசை[தொகு]

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, சாம் சி. எஸ், ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

வெளியீடு[தொகு]

இந்த படம் ஆகஸ்ட் 27, 2021 அன்று சோனி Liv -இல் வெளியிடப்பட்டது.[7] [8]

சான்றுகள்[தொகு]

  1. "First look of Kasada Thapara, Venkat Prabhu's next production, directed by Chimbu Deven, is out".
  2. "Tweet by Suriya about Kasada Thapara". Twitter. 2019-05-20.
  3. B, Ezhilselvi (2019-05-23). "கசட தபற... வாரே வா...படத்துக்கு இப்படி எல்லாம் தலைப்பு வச்சா தமிழை அசைச்சுக்க முடியாது!". Tamil Filmibeat. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  4. "First look of Kasada Thapara, Venkat Prabhu's next production, directed by Chimbu Deven, is out". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  5. "Suriya reveals title of Venkat Prabhu's Black Ticket Company's third production venture with Chimbu Devan! - In.com". Dailyhunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  6. Dinamalar (2019-05-26). "கசட தபற பர்ஸ்ட் லுக் வெளியானது | First look of Kasada Thapara is out". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
  7. Suganth, M (26 August 2021). "Kasada Thapara Review: Kasada Thapara engages despite the uneven storytelling". Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 August 2021.
  8. "Kasada Thapara". GetIndiaNews. 26 August 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசட_தபற&oldid=3673485" இலிருந்து மீள்விக்கப்பட்டது