கசடதபற

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1970 ஆம் ஆண்டு தொடங்கி மூன்றாண்டுகள் வெளிவந்த கசடதபற ஒரு இலக்கிய சிறப்பிதழாகும். அது கலை, இலக்கியம், விமர்சனம், சிற்பம், ஓவியம் என்று முக்கியமாகக் கொண்டு செயல்பட்டது. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட ஏழு அல்லது எட்டு நபர்கள் ஒன்றாக சேர்ந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டார்கள். கசடதபற இதழானது சிறுகதைகள், புதுக்கவிதைகள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகளுடன் இலக்கிய நடப்புகள் பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தது. அதுபோல், தமிழ்நாட்டு ஓவியர்களின் சித்திரங்களைத் தொடர்ந்து வெளியிட்டது.

முப்பதாண்டுகளுக்குப் பிறகு, கசடதபற ஏடுகளைப் புரட்டிப் பார்க்கையில், அதில் கழிப்பதற்கு அதிகமாக ஒன்றுமில்லை என்று சா. கந்தசாமி அவர்கள் கூறியுள்ளார். கசடதபறவின் விழுமிய நோக்கங்களையும், அதில் இடம் பெற்ற எழுத்துக்களையும் மறுபதிப்பு செய்வதும், இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவாவும் எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எம். நந்தன் அவர்கள் கூறியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசடதபற&oldid=2377889" இருந்து மீள்விக்கப்பட்டது