கங்கொல்லி
கங்கொல்லி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°39′13.7″N 74°39′59.0″E / 13.653806°N 74.666389°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | உடுப்பி |
ஏற்றம் | 22.2 m (72.8 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 35,200 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம், தக்கினி, நவயாத்தி, கொங்கணி, பியரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 576216 |
தொலைபேசி இணைப்பு எண் | 08254 |
வாகனப் பதிவு | கேஏ-20 |
கங்கொல்லி (Gangolli) என்பது கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தின் குந்தாப்புரா வட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சகங்கவல்லி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. இது கர்நாடகாவின் மேற்கு கடற்கரையில் ஒரு மூவலந்தீவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கு எல்லலையாக பஞ்சகங்கவள்ளி ஆறும், மேற்கில் அரபிக் கடலும் உள்ளது.
நகரத்தின் பெயர் முதலில் "கங்குலி" என்று உச்சரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் படிப்படியாக இப்போது "கங்கொல்லி" என்று மாறியது. அஞ்சல் முத்திரை இன்னும் பழைய எழுத்துடனே இருக்கிறது.
வரலாறு
[தொகு]5 ஆறுகள் (சௌபர்னிகா நதி, வராஹி ஆறு, கெடகா நதி, சக்ரா நதி, மற்றும் குப்ஜா நதி ) சந்திக்கும் ஒரு தோட்டத்தின் முகப்பில் அமைந்துள்ள கங்கொல்லி இதற்கு முன்னர் "பஞ்சகங்கவல்லி" என்று அழைக்கப்பட்டது. இந்த நதியின் பெயர்கள் உள்ளூர் கன்னட பதிப்புகள் கொல்லூரு ஹோல், ஹலாடி ஹோல், ராஜாடி ஹோல், வாண்ட்சே ஹோல் மற்றும் ஹேமடி ஹோல் என்று அழைத்தன.[1]
1565 இல் தலிகோட்டா சண்டை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து விஜயநகர பேரரசில் ஏற்பட்ட கொந்தளிப்பின் போது, கங்கொல்லி கேளடி நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.[2] அந்த நேரத்தில் கங்கொல்லியைச் சுற்றியுள்ள மக்கள்தொகை மற்றும் செயல்பாடு குறைவாக இருந்தது. ஏனெனில் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து அடர்ந்த காடுகளாக இருந்தன. கங்கொல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் பெரும்பாலும் வீரசைவர்கள், சமணர்கள் ஆவர். அவர்களின் தொழில்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தலாகும். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பயணியான இப்னு பதூதா 13 ஆம் நூற்றாண்டில் தனது எழுத்துக்களில் கூட கங்கொல்லியிலிருந்து மேலும் உட்பகுதியிலுள்ள பஸ்ரூர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்கள்
[தொகு]கிராமத்தின் மொத்த புவியியல் பரப்பளவு 407.04 ஹெக்டேர் ஆகும். கங்கொல்லியில் மொத்தம் 13,014 மக்கள் உள்ளனர். கங்கொல்லி கிராமத்தில் சுமார் 2,546 வீடுகள் உள்ளன. குந்தாபுராவிலுருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் உள்ளது.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ "Gangolli-a picturesque ancient holy place". mallyarmutt.org. Archived from the original on 7 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Arabian Seas By R. J. Barendse
- ↑ "கங்கொல்லி". பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.