கங்கை வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கை வழிபாடு
Ganga Puja
வாரணாசியில், கங்கை ஆற்றில் சூரிய உதயத்தின் போது கங்கை பூசை
கடைபிடிப்போர்திரிபுரி மக்கள்
கொண்டாட்டங்கள்ஆறு/நீரோடை வழிபாடு
நாள்மார்ச்/ஏப்ரல்/மே மாதங்களில் (இந்து -லூனிசோலார் நாட்காட்டி முடிவு செய்யப்படும்)

கங்கை வழிபாடு (Ganga puja) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கொண்டாடப்படும் ஒரு மத விழாவாகும் . பழங்குடியின திரிபுரி மக்கள் ஆற்றினைத் தெய்வத்தை வழிபடுகிறார்கள். மேலும் இவர்கள் தொற்றுநோய்களிலிருந்து காப்பாற்றப்படவும், கர்ப்பிணிப் பெண்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தில் ஆற்றின் நடுவில் அல்லது நீரோடையில் மூங்கிலால் ஆன கோயில் ஒன்றைக் கட்டுவர். உள்ளூரில் கங்கை என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றினை இவர்கள் கடவுளாக வணங்குகின்றனர். இப்பகுதியில் வழிபடப்படும் பதினான்கு பிரதான தெய்வங்களில் கங்கையும் ஒன்றாகும். இந்த விழா மாநிலம் முழுவதும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. சோம கங்கா பூசை இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் ஒரு மத திருவிழா ஆகும். இந்து சந்திர சூரிய நாட்காட்டியின்படி இதன் தேதி நிர்ணயிக்கப்பட்டு மார்ச், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மாநிலம் முழுவதும் திருவிழா பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது.

வாடிக்கை நிகழ்வுகள்[தொகு]

நெல் அறுவடையைக் குறிக்கும் நபண்ணா திருவிழாவிற்குப் பிறகு கங்கா பூசை கொண்டாடப்படுகிறது. இதன் கொண்டாட்ட நாள் மாறுபடும். ஆனால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இது திரிபுராவின் பதினான்கு முதன்மையான தெய்வங்களில் ஒன்றான கங்கை அல்லது கங்கையின் நதி தெய்வத்தை வழிபடுவதைக் குறிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில், பழங்குடி சமூகங்கள் ஓடை அல்லது ஆற்றின் கரையில் ஒன்றுகூடி, "மூன்று மூங்கில் துண்டுகளை அழகான பூ”வாக உருவாக்குகின்றனர். இதற்குப் பிறகு இவர்கள் ஓடையின் நடுவில் மூங்கிலால் ஆன தற்காலிக கோயில் ஒன்றைக் கட்டி, பயபக்தியுடன் கொண்டாட்டங்களை நடத்துகிறார்கள். ஆண் வாத்துக்கள், ஆடுகள் மற்றும் எருமைகள் இத்தெய்வங்களுக்காகப் பலியிடப்படுகின்றன. இது போன்ற பிரசாதங்கள் மூலம் கடவுள்களின் சக்தியைப் பயன்படுத்தி தொற்றுநோயைத் தடுக்கலாம் என்று நம்புகிறார்கள். திருவிழாவின் மற்றொரு நோக்கம் என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்களின் நல்வாழ்வை உறுதி செய்யத் தெய்வங்களிடம் பயபக்தியுடன் வேண்டுகின்றனர். திரிபுரா மாநிலம் முழுவதும் நடைபெறும் பாரம்பரிய நடனம் வழிபாட்டுத் திருவிழாவின் ஒரு பகுதியாகும்.[1]

தொடர்புடைய நிகழ்வுகள்[தொகு]

திருவிழாவிற்கு பணம் செலுத்த, திரிபுரா மாநிலத்தின் பரம்பரை ஆட்சியாளரின் கீழ் உள்ள பாதிரியார்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களால் பழங்குடியின மக்களிடம் நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டன். 1943ஆம் ஆண்டில், இந்தக் கட்டணங்கள் ரூபாய் 2லிருந்து 4ஆக (இந்திய ரூபாய்) உயர்த்தப்பட்டன. இது பழங்குடியினர் இந்த உயர்வுக்கு எதிராக பரவலான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவர்கள் ஆட்சேபனைகள் தணிக்கப்பட்டன.

ஆகத்து 1947-ல் பிரித்தானிய இந்தியாவாக இருந்த இந்தியா விடுதலை மற்றும் இந்தியப் பிரிப்பினைத் தொடர்ந்து, திரிபுரா மாநிலத்தின் செயல் ஆட்சியாளர், ரீஜண்ட் காஞ்சன் பிரவா தேவி, புதிய இந்திய ஒன்றியத்தில் சேரவில்லை.[2] இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்டமுக்தி பரிஷத் என்று அழைக்கப்பட்ட இயக்கத்தைத் தொடங்கியது. இதன் நோக்கம் திரிபுராவின் மகாராஜாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியினை நிறுவுவதாகும். 1948ஆம் ஆண்டில், இந்த இயக்கத்தின் தலைவரான தேசர்ரத் டெபர்மா, கங்கா பூசையின் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முக்தி பரிஷத்துக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ரூபாய் 1 வசூலித்து நிதி திரட்டினார். இருப்பினும், இவரது இயக்கத்தின் செயல்பாடுகள் காலப்போக்கில் குறைக்கப்பட்டன, குறைந்தது. 1950-ல் இந்த இயக்கம் இறுதியாக பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்தது. இதற்கிடையில், அக்டோபர் 1949-ல் திரிபுரா புதிய இந்தியாவுடன் இணைந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. . 1 September 2006. 
  2. 2.0 2.1 Historical background பரணிடப்பட்டது 2015-02-12 at the வந்தவழி இயந்திரம் at Tripura.gov.in, accessed 8 November 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கை_வழிபாடு&oldid=3653901" இலிருந்து மீள்விக்கப்பட்டது