கங்கை நதியுடன் ஒரு நடைப்பயணம்
Front cover | |
நூலாசிரியர் | டென்னிசன் பெர்விக்கு |
---|---|
மொழி | ஆங்கிலம் |
வகை | பயணக் குறிப்பு |
வெளியீட்டாளர் | இலண்டன் : செஞ்சுவரி அட்கின்சன் |
ஆங்கில வெளியீடு | 1986 |
ISBN | 0091637600 |
915.4/10452 |
கங்கை நதியுடன் ஒரு நடைப்பயணம் (A Walk Along the Ganges) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிசன் பெர்விக் 1986 ஆம் ஆண்டு எழுதிய பயணக் குறிப்பு நூலாகும். இந்த புத்தகத்தில், இந்தியப் புனித நதியான கங்கையின் பாதையில் மேற்கொண்ட 2000 மைல் தொலைவு நடைப் பயணம் பற்றி டென்னிசன் கூறுகிறார். [1][2]
பின்னணி
[தொகு]நைல் நதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கங்கை ஆற்றின் கரையோரம் நடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் பெர்விக்கிற்கு தோன்றியதாம். இவர் எழுதிய புத்தகத்தின் முன்னுரையில் சிறுவயதிலிருந்தே தனக்கு இந்தியாவுக்கு வந்து இந்தியாவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த 2000 மைல் நடைப் பயணத்தின் மூலம் இவர் இந்தியாவை ஆராயவும் முயன்றுள்ளார். [3]
உள்ளடக்கம்
[தொகு]புத்தகம் பல அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தனது பயணம் முழுவதும் உதவி செய்தவர்களுக்கு புத்தக முன்னுரையில் நன்றியைத் தெரிவித்துள்ளார். ஆற்றின் பாதை முழுவதையும் எப்படி, எப்போது பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதைத் தாக்கியது தொடங்கி அதற்காக இவர் எவ்வாறு தயாரானார் என்பதைப் பற்றியும் புத்தகத்தின் முன்னுரையில் தெரிவித்துள்ளார். பின்னர் புத்தகத்தை பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார், இவ்வத்தியாயங்களில் பெர்விக் தன் பயணத்தின் போது சேகரித்த வெவ்வேறு அனுபவங்களை விவரித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dennison Berwick (1986). A Walk Along The Ganges. Dennison Berwick. p. Preface. ISBN 978-0-7137-1968-0.
- ↑ "A Walk Alone The Ganges (details)". Retrieved 2 March 2013.
- ↑ "Note on the book". Archived from the original on 14 November 2012. Retrieved 2 March 2013.