கங்கை காவிரி விரைவு இரயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கை காவிரி விரைவு இரயில் (Ganga Kaveri Express) இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் ஓர் இரயில் சேவையாகும். இந்திய ரயில்வே இந்த இரயிலை இயக்குகிறது. தென்னிந்தியாவில் சென்னையையும் பீகாரில் சாப்ரா நகரையும் இவ்வண்டி இணைக்கிறது[1][2].1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் கமலாபதி திரிபாதி இவ்விரைவு இரயிலை தொடங்கிவைத்தார்[3]. அப்போது இவ்வண்டி மெட்ராசு மற்றும் வாரணாசி இடையே, ஓடியது. சென்னைக் கடற்கரை இரயில் நிலையத்தில் இவ்வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மீட்டர் அளவு பாதையில் .கங்கா காவேரி விரைவு இரயில் இராமேசுவரத்திற்கு காவிரி நதி படுகை வழியாக ஓடியது.

பெயர்க்காரணம்[தொகு]

இரண்டு இந்திய நதிகளின் பெயர் இவ்விரைவு இரயிலுக்கு சூட்டப்பட்டுள்ளது. கங்கை புனித நகரமான வாரணாசியிலும், சாப்ராவிலும் பாய்கிறது. காவேரி நதி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் பாய்கிறது.

வரலாறு[தொகு]

இரயில் எண் 139/140 அதிவிரைவு இரயில் சேவை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து வாரணாசிக்கு தனது சேவையைத் தொடங்கியது, எதிரில் இருந்த மற்றொரு நடைமேடையிலிருந்து மீட்டர் அளவு பாதையில் கங்கா காவிரி விரைவு இரயில் இராமேசுவரம் நோக்கி ஓட பயன்பட்டது. ஏனெனில் சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் - இராமேசுவரம் பாதை அதுவரையில் மீட்டர் அளவு இரயில் பாதையாகவே இருந்தது. பின்னர் அதிவிரைவு இரயில் என்ற நிலை, இரத்து செய்யப்பட்டது. சென்னை கடற்கரை இரயில் நிலையம் என்ற முனை சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் கங்கா காவேரி விரைவு இரயில் என்ற பெயரும் மாற்றப்பட்டு மெட்ராசு வாரணாசி விரைவு இரயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் சில நிலையங்களில் நிறுத்தங்கள் அதிகரித்தன. ஒர் இரவு இரயில் என்பது இரண்டு இரவு இரயிலாக மாற்றப்பட்டது.. அதுவரை இயல்பாக ஓடிய நேரத்தைக்காட்டிலும் மூன்று மணி நேரம் பயணம் அதிகரித்தது. பச்சை மற்றும் மஞ்சள் நிற பெட்டிகள் திரும்பப் பெறப்பட்டு குளிர்சாதன தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன[4]. பின்னர் 90 ஆண் ஆண்டுகளில் யாபர் செரீப் தற்போது கங்கா காவிரி விரைவு இரயில் என இயங்கும் இரயிலை தென்னிந்திய சுற்றுலாப் பயணிகள் புனித நகரமான வாரணாசிக்குப் பயணம் செய்வதற்காக அறிமுகப்படுத்தினார்[5][6][7] for the benefit of South Indian tourists, willing to travel to holy city of Varanasi.[8][9][10], வாரணாசியில் இருந்த உள்ளூர் தென்னிந்தியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த இரயில் 2006 டிசம்பரில் சாப்ரா வரைக்கும் நீட்டிக்கப்பட்டது,

பாதை[தொகு]

இந்த இரயில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள இட்டார்சி நகரம் வரையில் மின்சார இரயில் பாதையில் இயங்கும் வசதியை பெற்றிருந்தது. பின்னர் அங்கிருந்து சாப்ரா வரையில் டீசல் இயந்திரத்தால் இந்த இரயில் இயக்கப்பட்டது. குதூர், ஒங்கோல், விசயவாடா, கம்மம், வாரங்கல், ராமகுண்டம், பலார்சா நாக்பூர், இத்தார்சி சந்திப்பு, சபல்பூர், கட்னி, சத்னா, அலகாபாத், வாரணாசி போன்றவை இவ்விரைவு இரயில் செல்லும் பாதையிலிள்ள முக்கிய சந்திப்புகள் ஆகும்.

இரயில் பெட்டிகள் விவரம்[தொகு]

இந்த இரயிலில் முதல் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிம் குளிர்சாதன இரண்டு அடுக்கு பெட்டி, , மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி, 13 தூங்கும் வகுப்புகள், இரண்டு பொது முன்பதிவு செய்யப்படாதவை, 2 சரக்கு மற்றும் பயணிகள் கார் மற்றும் 1 சமையல் கார் என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
BSicon LDER.svg எசு.எல்.ஆர் பொது எசு13 எசு12 எசு11 எசு10 எசு9 எசு8 எசு7 எசு6 எசு5 எசு4 எசு3 உணவு எசு2 எசு1 பி2 பி1 ஏ3 ஏ2 ஏ1 எச்.ஏ ஏ1 பொது எசு.எல் ஆர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "12669/Ganga Kaveri Express (PT) - Chennai to Chhapra SR/Southern Zone - Railway Enquiry". மூல முகவரியிலிருந்து 26 September 2008 அன்று பரணிடப்பட்டது., India Rail Info,11 April 2015.
  2. "12670/Ganga Kaveri Express - Chhapra to Chennai SR/Southern Zone - Railway Enquiry". மூல முகவரியிலிருந்து 27 September 2008 அன்று பரணிடப்பட்டது., India Rail Info,11 April 2015.
  3. [1], [IRFCA.com],11 April 2015.
  4. [2], [IRFCA.com],11 April 2015.
  5. [3], [indiarailinfo.com],11 April 2015.
  6. [4], [indiarailinfo.com],11 April 2015.
  7. [5], [www.indiamike.com],11 April 2015.
  8. [6], [whereincity.com],11 April 2015.
  9. [7], [whereincity.com],11 April 2015.
  10. [8], Allahabad Nagar Nigam,11 April 2015.

புற இணைப்புகள்[தொகு]