கங்கா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராவ் பகதூர் சர்
கங்கா ராம் அகர்வால்
பிறப்பு13 ஏப்ரல்1851
மங்தன்வாலா, நங்கானா சாகிபு மாவட்டம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது பாக்கித்தான்)
இறப்பு10 சூலை 1927 (வயது 76)
இலண்டன், இங்கிலாந்து
மற்ற பெயர்கள்நவீன இலாகூரின் தந்தை
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
பணிகட்டிடப் பொறியாளர்
அறியப்படுவதுஇலாகூர்,பொது தபால் அலுவலகம்
இலாகூர் அருங்காட்சியகம்
அட்ச்சன் கல்லூரி
மயோ தேசிய கலைக் கல்லூரி
சர் கங்கா ராம் மருத்துவமனை /> ஹெய்லி வணிகக் கல்லூரி
தி மால், லாகூர்.
சொந்த ஊர்லாகூர்
உறவினர்கள்அசுவின் ராம்
சிறீஇலா பிளாதர், பரோனசு பிளாதர்

ராவ் பகதூர் சர் கங்கா ராம் (Sir Ganga Ram) (22 ஏப்ரல் 1851 - 10 சூலை 1927) இவர் ஓர் இந்திய குடிசார் பொறியியலாளரும், கட்டிடக் கலைஞரும் ஆவார் . நவீன பாக்கித்தானில் இலாகூரின் நகர்ப்புற வளர்சிக்கு இவர் செய்த விரிவான பங்களிப்புகள், கலீத் அகமது இவரை "நவீன இலாகூரின் தந்தை" என்று வர்ணிக்க காரணமாக அமைந்தது.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கத்ரி இனத்தைச் சேர்ந்த கங்கா ராம் 1851 இல் பிரிட்டிசு இந்தியாவில் (இப்போது பாக்கித்தானில் ) பஞ்சாப் மாகாணத்தின் மங்தன்வாலா என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை தௌலத் ராம் மங்தன்வாலாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருந்தார். பின்னர், அவர் அமிர்தசரஸ் நகருக்குச் சென்று நீதிமன்றத்தின் நகல் எழுத்தாளரானார். இங்கே, கங்கா ராம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்று 1869 இல் இலாகூர் அரசு கல்லூரியில் சேர்ந்தார். 1871 ஆம் ஆண்டில், ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக்த்தில் உதவித்தொகை பெற்று படித்தார். இவர் 1873 இல் தங்கப் பதக்கத்துடன் இறுதி கீழ்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். உதவி பொறியாளராக நியமிக்கப்பட்ட இவர், பேரரசின் சட்டமன்றத்தைக் கட்டுவதற்கு உதவ டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

தொழில்[தொகு]

இலாகூர் அருங்காட்சியகக் கட்டிடம் சர் கங்கா ராம் வடிமைத்து இந்தோ-சரசனிக் கட்டடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டது.

பொறியாளர்[தொகு]

1873 ஆம் ஆண்டில், பஞ்சாபில் ஒரு சிறுது கால பணிக்குப் பிறகு பொதுப்பணித் துறையில் நடைமுறை விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதற்காக இவர் அரசாங்கத்திடமிருந்து 50,000 ஏக்கர் (200கிமீ²) குத்தகைக்கு பெற்றார் . மாண்ட்கோமெரி மாவட்டத்தில் நீர்ப்பாசனம் இல்லாமல் தரிசாக இருந்த நிலத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் மாற்றினார். நீர்மின்சார ஆலையால் வெளியேற்றப்பட்ட நீரை ஆயிரம் மைல் நீர்ப்பாசன தடங்கள் வழியாக கொண்டு சென்று பாசனம் செய்தார். இவை அனைத்தும் தனது சொந்த செலவில் செய்தார். இது முன்னர் நாட்டில் அறியப்படாத மற்றும் சிந்திக்கப்படாத ஒரு பெரிய தனியார் முயற்சியாகும். இதன் மூலம் சர் கங்கா ராம் மில்லியன் கணக்கான பணத்தை சம்பாதித்தார்.

பஞ்சாபின் ஆளுநரான சர் மால்கம் ஹெய்லியின் வார்த்தைகளில், "அவர் ஒரு ஹீரோவைப் போல வென்றார், ஒரு புனிதரைப் போலவே கொடுத்தார்". அவர் ஒரு சிறந்த பொறியியலாளர் மற்றும் ஒரு சிறந்த பரோபகாரர்.

எட்டாம் எட்வர்டு மன்னர் பதவியேற்பது தொடர்பாக நடைபெறவிருக்கும் தில்லி தர்பாரில் பணிகளின் கண்காணிப்பாளராக செயல்பட 1900 ஆம் ஆண்டில் கங்கா ராம் கர்சன் பிரபுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தர்பாரில் அதன் பன்மடங்கு பிரச்சினைகள் மற்றும் சவால்களை நிர்வகிக்கும் பணியை இவர் திறம்பட முடித்தார். 1903 இல் அரசு சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றார்.

இவர் 1903 ஆம் ஆண்டில் ராவ் பகதூர் என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் தில்லி தர்பாரில் தனது சேவைகளுக்காக 1903 சூன் 26 அன்று இந்திய இராச்சியத்தின் ஆணையின் தோழராக நியமிக்கப்பட்டார்.[2] 1911 திசம்பர் 12 அன்று, 1911 டெல்லி தர்பாருக்குப் பிறகு ஒரு சிறப்பு கௌரவப் பட்டியலில், இவர் பேரரசின் விக்டோரியன் ஆணையின் நான்காம் வகுப்பு (இன்றைய லெப்டினன்ட்) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[3] இவர் 1922 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் வீரத்திருத்தகை ஆனார்.[4] சூலை 8 ஆம் தேதி பக்கிங்காம் அரண்மனையில் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களால் தனிப்பட்ட முறையில் மரியாதை செய்யப்பட்டார்.[5]

இலாகூரில் பொது தபால் அலுவலகம், இலாகூர் அருங்காட்சியகம், அட்ச்சன் கல்லூரி, மாயோ கலைகளுக்கானப் பள்ளி (இப்போது தேசிய கலைக் கல்லூரி ), கங்கா ராம் மருத்துவமனை, (1921), லேடி மெக்லாகன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசுக் கல்லூரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை, மாயோ மருத்துவமனையின் ஆல்பர்ட் விக்டர் பிரிவு, சர் கங்கா ராம் உயர்நிலைப்பள்ளி (இப்போது பெண்களுக்கான இலாகூர் கல்லூரி ), ஹெய்லி வணிகக் கல்லூரி (இப்போது ஹெய்லி வங்கி மற்றும் நிதி கல்லூரி ), ஊனமுற்றோருக்கான ரவி சாலை வீடு, கங்கா ராம் அறக்கட்டளைக் கட்டிடம் " தி மால் " மற்றும் லேடி மேனார்ட் தொழில்துறை பள்ளி ஆகியவற்றை வடிமைத்து கட்டினார். ஒரு காலத்தில் இலாகூரின் சிறந்த இடங்களான மாதிரி நகரமும் குல்பெர்க் நகரமும், ரெனாலா குர்தில் உள்ள அதிகார மையத்தையும், பதான்கோட்டிற்கும், அமிருதசரசுக்கும் இடையேயான இரயில் பாதையையும் இவர் கட்டினார்.

இந்தியாவும் பாக்கித்தானும் பிரிந்த பின்னர், புது தில்லியில் 1951 ஆம் ஆண்டில் இவரது நினைவாக சர் கங்கா ராம் மருத்துவமனை என்ற மற்றொரு மருத்துவமனை கட்டப்பட்டது.[6]

பட்டியாலா மாநிலத்தில் சேவை[தொகு]

இவர் ஓய்வு பெற்ற பின்னர் தலைநகரின் புனரமைப்பு திட்டத்திற்காக பட்டியாலா மாநிலத்தில் கண்காணிப்புப் பொறியாளராக ஆனார். மோதி பாக் அரண்மனை, புது தில்லி, தலைமைச்செயலக கட்டிடம், விக்டோரியா பெண்கள் பள்ளி, சட்ட நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையம் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

பைசலாபாத் மாவட்டத்தின் ஜரன்வாலா வட்டத்தில், கங்கா ராம் ஒரு தனித்துவமான பயண வசதியை ஏற்படுத்தினார். கோடா ரயில் (குதிரை இழுக்கும் இரயில் வண்டி). இது புச்சியானா இரயில் நிலையத்திலிருந்து (இலாகூர் ஜரன்வாலா இரயில் பாதையில்) கங்காப்பூர் கிராமம் வரி சென்றது. சுதந்திரத்திற்குப் பிறகும் பல தசாப்தங்களாக இது பயன்பாட்டில் இருந்தது. 1980களில் ஏற்பட்ட இது பயனற்று போனது. இது அதன் வகையான தனித்துவமானது. இரயில்வே என்ஜினுக்கு பதிலாக குதிரைகள் குறுகிய ரயில் பாதையில் இழுக்கப்பட்ட இரண்டு எளிய இரயில் தடங்களாக இது இருந்தது. 2010 ஆம் ஆண்டில் பைசலாபாத் மாவட்ட அதிகாரிகள் இந்தக் குதிரை இரயிலுக்கு கலாச்சார பாரம்பரியத்தின் அந்தஸ்தை வழங்கினர்.

விவசாய நிபுணர்[தொகு]

இவர் ஒரு நம்பிக்கைக்குரிய விவசாயியாக இருந்தார். இவர் ரெனாலா அருகே அரசாங்கத்திடமிருந்து 20,000 ஏக்கருக்கும் அதிகமான தரிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, நீர் மின்னாற்றல் மூலம் வெளிப்படும் தண்ணிரை முழுமையாக பாசனம் செய்வதன் மூலம் பயிரிட்டார். இவர் லியால்பூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். பொறியியல் திறன் மற்றும் நவீன நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தி வறண்ட நிலங்களை வளமான வயல்களாக மாற்றினார்.[சான்று தேவை] இவர் 25000 ரூபாயில் மேனார்ட்-கங்கா ராம் விருதை நிறுவி பஞ்சாபில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபடுவோருக்கு ரூ.3000 பரிசு வழங்கினார். இந்த விருது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

இலாகூரில் சர் கங்கா ராமின் சமாதி .
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இவரது சிலை

இவர் 1927 சூலை 10 அன்று இலண்டன் இறந்தார். இவரது உடல் தகனம் செய்யப்பட்டு, சாம்பல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. சாம்பலின் ஒரு பகுதி கங்கை ஆற்றிலும், மீதமுள்ளவை ராவி ஆற்றிலும் கரைரக்கப்பட்டது

மரபு[தொகு]

சர் கங்கா ராமின் மார்பளவு பளிங்கு சிலை ஒரு முறை இலாகூரில் வணிக வளாக சாலையில் உள்ள ஒரு பொது சதுக்கத்தில் அமைக்கப்பட்டது. இவரது நினைவாக கங்கா பவன் என்ற மாணவர் விடுதி 1957 நவம்பர் 26 அன்று ரூர்க்கி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நிறுவப்பட்டது.[7] பாக்கிதானின் இலாகூரில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை 27 மே 2009 அன்று அருகிலுள்ள காவல் நிலையத்தை அழிக்கும் முயற்சியில் ஏற்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் ஓரளவு சேதமடைந்தது.[8]

இன்று, இவரது மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் இவரது குடும்பம் உலகம் முழுவதும் வசிக்கிறது. இவர்களில் சிலரில் பெரிய பேரனும், புது தில்லியில் உள்ள சர் கங்காரம் மருத்துவமனையின் நிறுவனர் தர்ம வீரனின் மகனும் இந்து வீரனும் ஒருவர். இவரது மற்றொரு பேரன், டாக்டர் அசுவின் ராம் ஜார்ஜியா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டிங் கல்லூரியில் உள்ள இன்டராக்டிவ் கம்ப்யூட்டிங் பள்ளியில் இணைப் பேராசிரியராக உள்ளார். அதே நேரத்தில் இவரது பேத்தி சிறீலா பிளாதர், பரோனசு பிளாதர் ஒரு ஆசிரியரும், பிரிட்டிசு அரசியல்வாதியுமாவார் .

கல்லறை[தொகு]

இவரது மரணத்திற்குப் பிறகு சமாதி இவரது 1927 இல்கட்டப்பட்டது. கல்லறை இப்போது சரிசெய்யப்பட உள்ளது.[9]

இவரது பணிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. . https://books.google.com/books?id=hjRuAAAAMAAJ. 
  2. "The London Gazette, 26 June 1903". Archived from the original on 8 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "The London Gazette, 12 December 1911". Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. The London Gazette, 3 June 1922[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "The London Gazette, 18 July 1922". Archived from the original on 23 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "Sir Ganga Ram Hospital New Delhi Official Website" (in ஆங்கிலம்). SGRH. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23.
  7. Ganga Bhawan Official Website of Ganga Bhawan, இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
  8. Pakistan: Trio held after deadly blast kills 27 CNN.com
  9. Sir Ganga Ram's abode on its last legs Dawn

மேலும் படிக்க[தொகு]

  • Bedi, Baba Pyare Lal, Harvest from the desert. The life and work of Sir Ganga Ram, NCA, Lahore 2003 ISBD 969-8623-07-8 (reprint version)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_ராம்&oldid=3547305" இலிருந்து மீள்விக்கப்பட்டது