உள்ளடக்கத்துக்குச் செல்

கங்கா சோட்டி

ஆள்கூறுகள்: 34°04′30″N 73°47′20″E / 34.07500°N 73.78889°E / 34.07500; 73.78889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கா சோட்டி
Ganga Choti
பாக் மாவட்டத்தில் கங்கா சோட்டி சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்3,045 m (9,990 அடி)[1]
பட்டியல்கள்பாக்கித்தானிலுள்ள மலைகள்
ஆள்கூறு34°04′30″N 73°47′20″E / 34.07500°N 73.78889°E / 34.07500; 73.78889
புவியியல்
கங்கா சோட்டி Ganga Choti is located in Kashmir
கங்கா சோட்டி Ganga Choti
கங்கா சோட்டி
Ganga Choti
காசுமீருக்குள் அமைவிடம்
கங்கா சோட்டி Ganga Choti is located in பாக்கித்தான்
கங்கா சோட்டி Ganga Choti
கங்கா சோட்டி
Ganga Choti
Location within Pakistan
அமைவிடம்பாக் மாவட்டம், காசுமீர், பாக்கித்தான்
மூலத் தொடர்பிர் பாஞ்சல் மலைத்தொடர்

கங்கா சோட்டி (Ganga Choti) என்ற சிகரம் பாக்கித்தான் நாட்டின் ஆசாத் காசுமீர் மாநிலத்திலுள்ள பாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] 3,045 மீட்டர் (9,990 அடி) உயரத்தில் அமைந்துள்ள இச்சிகரம் இமயமலைத்தொடரின் உள்பகுதியில் இருக்கும் பிர் பாஞ்சல் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும்.[3] புவியியல் ரீதியாக, இச்சிகரம் பானி மின்காசன் கிராமத்தில் ஒன்றியக்குழு பிர்பானி நகரத்திற்கும் சுதான் கலி கிராமத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.

உள்ளூர் பரப்பு

[தொகு]

கங்கா சோட்டி என்பது பாக் மாவட்டத்தில் உள்ள கிராமமும் பிர்பானி தாலுகாவிலுள்ள ஒரு சிகரமுமாகும். கிராமத்திற்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் அட்டியன் பாலா மாவட்டம் உள்ளது. காசுமீர் பிரிவினைக்கு முன்பு, கங்கா சோட்டி சிகரம் காசுமீர் மற்றும் சம்மு மாவட்டங்களின் எல்லையில் இருந்தது.

பெயர்க் காரணம்

[தொகு]

இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இப்பகுதியில் வசித்த உள்ளூர் இந்துக்களால் இந்த சிகரம் அதன் பெயரைப் பெற்றதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.[3]

அணுகல்

[தொகு]

கங்கா சோட்டியை அடைய இரண்டு வழிகள் உள்ளன. சிக்கர் நகரத்திலிருந்து ஒரு பாதையும், பாக் சுதன் கலி சாலையிலிருந்து மற்றொரு பாதையும் இச்சிகரத்திற்கு செல்கின்றன. சுதன் கலி என்பது கங்கா சோட்டியிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். பயணிகள் பயன்படுத்தக்கூடிய சில கடைகளும் விடுதிகளும் இங்குள்ளன. இங்கிருந்து, சிகரத்தை அடைய எட்டு கிலோமீட்டர் உயரமான நடைபயணம் தேவை. பயணத்தை குறைக்க சாலைக்கு வெளியே உள்ள வாகனங்களையும் பயன்படுத்தலாம்.[4]

குளிர்கால விளையாட்டுகள்

[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில், ஆசாத் சம்மு காசுமீர் குளிர்கால விளையாட்டு சங்கம், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் குளிர்கால விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது.[5][6]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ganga Choti - Department of Tourism". Department of Tourism Aj&K. Retrieved 12 March 2023.
  2. Quraishi, Omar R. (2015-04-05). "8 beautiful mountains in Pakistan that you probably haven't heard of". The Express Tribune (in ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
  3. 3.0 3.1 Ahmed, Sanober (2015-08-16). "Azad Jammu and Kashmir: Hometown glory". The Express Tribune (in ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
  4. Piracha, Imtiaz (2016-09-18). "Travel: Sudhan Gali will make you forget Murree". Dawn (in ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
  5. Naqash, Tariq (2022-02-10). "Ganga Choti winter event from today". Dawn (in ஆங்கிலம்). Retrieved 2023-03-12.
  6. "AJK's week-long winter festival comes to an end". The Express Tribune (in ஆங்கிலம்). 2023-02-14. Retrieved 2023-03-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_சோட்டி&oldid=4268226" இலிருந்து மீள்விக்கப்பட்டது