கங்கா சஜ்ஜன் சிங் உய்கே
கங்கா சஜ்ஜன் சிங் உய்கே | |
|---|---|
| உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | பிரம்மா பாளவி |
| தொகுதி | கோரடோங்கிரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | கோரடோங்கிரி, மத்தியப் பிரதேசம் இந்தியா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | சஜ்ஜன் சிங் |
| கல்வி | இளங்கலை |
| முன்னாள் மாணவர் | பர்கத்துல்லா பல்கலைக்கழகம், போபால் |
| பணி | அரசியல்வாதி |
கங்கா சஜ்ஜன் சிங் உய்கே (Ganga Sajjan Singh Uikey)(பிறப்பு 1974) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெதுல் மாவட்டத்தில் உள்ள பழங்குடி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட கோரடோங்கிரி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]கங்கா பெதுல் மாவட்டத்தின் கோரடோங்கிரியில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மறைந்த கணவர் சஜ்ஜன் சிங் கோரடோங்கிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் 2000ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்தார், கங்கா.[3]
அரசியல்
[தொகு]2023 மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோரடோங்கிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு கங்கா வெற்றி பெற்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் இராகுல் உய்கேயை 4,213 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ english. "ganga sajjan singh uikey madhya-pradesh ganga-sajjan-singh-uikey-ghoradongri candidate Profile,Candidates Net Worth, Education News | ABP Live News". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-12.
- ↑ "Ganga Sajjan Singh Uikey, BJP Candidate from Ghoradongri Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-12.
- ↑ "Ganga Sajjan Singh Uikey(Bharatiya Janata Party(BJP)):Constituency- GHORADONGRI (ST)(BETUL) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-06-12.
- ↑ "गंगा सज्जन सिंह उइके , बीजेपी Election Results LIVE: Latest Updates On गंगा सज्जन सिंह उइके Constituency Seat NDTV.in". ndtv.in. Retrieved 2024-06-12.
- ↑ "Ghodadongri assembly election results 2023: Ghodadongri Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-12.