உள்ளடக்கத்துக்குச் செல்

கங்காராமய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காராமய விகாரை
சீமா மலக்க

கங்காராமய இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த ஒரு  பௌத்த விகாரை ஆகும்.[1]

கட்டிடக்கலை

[தொகு]

இந்த விகாரையின் கட்டிடக்கலையானது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மற்றும் சீனக்கட்டிடக்கலைகளின் கலவையாக உள்ளது. இந்த பௌத்த விகாரையானது பெர வாவிக்கு அருகாமையில் சில கட்டிடத்தொகுதிகளில் அமைந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக விகாரை, போதிமரம், சீமா மலக்க (பௌத்த பிக்குகளின் ஒன்றுகூடுமிடம்), நூலகம், அருங்காட்சியகம், தங்கும் பகுதி, பௌத்த பிக்குகளின் கல்விக்கூடம் மற்றும் யாசகசாலை போன்றவை காணப்படுகின்றன

சீமா மலக்க ஆனது சுற்றுலா பயணிகளின் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது முஸ்லீம் மத வர்த்தகரின் நன்கொடையினால் இலங்கைக் கட்டிடக்கலை நிபுணரான Geoffrey Bawa என்பவரின் வடிவமைப்பில் உருவானதாகும் .

வெளியிணைப்புகள்

[தொகு]

கங்காராமய

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gangaramaya Temple". John Keells Hotels Group. Archived from the original on 10 May 2012. பார்க்கப்பட்ட நாள் 30 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காராமய&oldid=3889717" இலிருந்து மீள்விக்கப்பட்டது