கங்காதர் நேரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்காதர் நேரு
தில்ல்யின் கொத்தவால்
அரசர் பகதூர் சா சஃபார்
தனிநபர் தகவல்
பிறப்பு 1827 (1827)
இறப்பு 4 பெப்ரவரி 1861(1861-02-04) (அகவை 33–34)
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெயராணி
உறவினர் காண்க நேரு-காந்தி குடும்பம்
பிள்ளைகள் பன்சிதார்
நந்தலால் நேரு
பத்ராணி
மகாராணி
மோதிலால் நேரு
பெற்றோர் இலட்சுமி நாராயண் நேரு

கங்காதர் நேரு (Gangadhar Nehru) (1827  – பிப்ரவரி 4, 1861) இவர் முகலாயப் பேரரசின், தில்லி செங்கோட்டையின் தலைமை காவல் அதிகாரி ஆவார். 1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து இந்தப்பதவி ரத்து செய்யப்படுவதற்கு முன்னர், முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் சா அரசவையில் தில்லி செங்கோட்டையின் இறுதி கொத்தவால் ஆக பணியாற்றினார்.

இவர் இந்திய சுதந்திர ஆர்வலர் மோதிலால் நேருவின் தந்தையும் மற்றும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தாத்தாவும் ஆவார். இதனால் நேரு-காந்தி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார். [1]

சுயசரிதை[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கங்காதரின் தந்தை இலட்சுமி நாராயண் நேரு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தில் தில்லியில் எழுத்தாளராக பணியாற்றினார். [2]

முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர் சாவின் சபையில் கங்காதர் நேரு காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். [3] 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் விளைவாக இந்தப் பதவி ரத்து செய்யப்பட்டதால், அந்த பதவியை வகித்த கடைசி நபர் இவர்தான். [4] பின்னர் பிரிட்டிசு துருப்புக்கள் நகருக்குள் நுழையத் தொடங்கியபோது, இவர் தனது மனைவி ஜெயராணி மற்றும் தங்களது நான்கு குழந்தைகளுடன் (பன்சிதார் மற்றும் நந்தலால் என்ற மகன்களும் மற்றும் பத்ராணி மற்றும் மகாராணி என்ற இரு மகள்கள்) ஆகியோருடன் ஆக்ராவுக்கு தப்பி ஓடினார். இவரது கடைசி மகன் மோதிலால் இவரது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு பிறந்தார். [5] [6]

கங்காதரின் மூத்த மகன், பன்சிதார் நேரு பிரிட்டிசு அரசாங்கத்தின் நீதித்துறையில் பணிபுரிந்தார். மேலும் பல்வேறு இடங்களுக்கு அடுத்தடுத்து நியமிக்கப்பட்டார். இதனால் குடும்பத்திடினிருந்து ஓரளவு தனியே இருந்தார். இரண்டாவது மகன் நந்தலால், ஒரு இந்திய அரசுப் பணியில் நுழைந்து, ராஜ்புதனத்தில் உள்ள கேத்ரி மாநிலத்தின் திவானாக பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் அவர் சட்டம் பயின்று ஆக்ராவில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராக ஆனார். [5]

வதந்தி[தொகு]

கங்காதர் நேருவின் அசல் பெயர் கியாசுதீன் காசி என்று ஒரு வதந்தி உள்ளது. [7] 1857 ஆம் ஆண்டில், நகரத்தின் கொத்தவால் கியாசுதீன் காசி பிரிட்டிசு துருப்புக்களால் கைப்பற்றப்படுவோம் என்று அஞ்சி தில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் ஓடிவந்ததாக கூறப்படுகிறது. இவர் ஒரு முகலாயப் பிரபுவின் உடையை அணிந்து ஒரு முஸ்லீம் செயல்பாட்டாளரைப் போல தோற்றமளித்ததால் ஆக்ராவில் பிரிட்டிசு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால் இஅவர் அவர்களை ஏமாற்றி, தான் ஒரு காஷ்மீர் இந்து எனவும், தனது பெயர் பண்டிட் கங்காதர் நேரு எனவும் கூறித் தப்பித்தார். [8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காதர்_நேரு&oldid=3005658" இருந்து மீள்விக்கப்பட்டது