உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தினத்தன்று இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச் சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 திருமதி. ஒய். ஜி. பார்த்தசாரதி 2012
2 மரு. வி. சாந்தா[1] 2013
3 மரு. கே.மாதங்கி [2] 2014
4 சாந்தி ரங்கநாதன்[3]. 2015
5 எம். சாரதா மேனன்[4]. 2016
6 சின்னப்பிள்ளை[5] 2018
7 2019
8 2020
9 சாந்திதுரைசாமி[6] 2021
10 கிரிஜா குமார்பாபு[7] 2022
11 ஆர்.கமலம் சின்னசாமி[8] 2023
12 பாசுடினா சூசைராஜ் @ பாமா[9] 2024

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு அரசின் செய்திவெளியீடு எண்:150, நாள்: 07-03-2013
  2. http://www.thehindu.com/news/national/tamil-nadu/avvaiyar-award-for-mathangi-ramakrishnan/article6100663.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication
  3. "Shanti Ranganathan gets Avvaiyar award". தி இந்து. 14 அக்டோபர் 2015. 
  4. "Avvaiyar award for Sarada Menon". தி இந்து. 20 ஜூலை 2016. 
  5. "அவ்வையார் விருது பெற்ற சின்னப்பிள்ளை பேட்டி". Archived from the original on 2021-09-27. Retrieved 2018-06-21.
  6. https://www.dinamani.com/tamilnadu/2021/Aug/15/sakthimasala-director-santhiduraisamy-received-the-avvaiyar-award-3680448.html
  7. https://athiyamanteam.com/tnpsc/avvaiyar-virudu-2022/
  8. https://timesofindia-indiatimes-com.translate.goog/city/chennai/avvaiyar-award-given-to-retd-tamil-teacher/articleshow/98503906.cms?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc
  9. "எழுத்தாளர் பாமாவுக்கு அவ்வையார் விருது" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்) 73: 16. 09.03.2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_விருது&oldid=3933047" இலிருந்து மீள்விக்கப்பட்டது