உள்ளடக்கத்துக்குச் செல்

ஔரையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔரையா
ஔரையா is located in உத்தரப் பிரதேசம்
ஔரையா
ஔரையா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஔரையா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°28′N 79°31′E / 26.47°N 79.52°E / 26.47; 79.52
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஔரையா மாவட்டம்
பரப்பளவு
  மொத்தம்9 km2 (3 sq mi)
ஏற்றம்
137 m (449 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்87,736
  அடர்த்தி9,700/km2 (25,000/sq mi)
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
206122
வாகனப் பதிவுUP-79
இணையதளம்https://auraiya.nic.in/

ஔரையா (Auraiya), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஔரையா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்மேற்கே 247 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25 வார்டுகளும், 15,898 குடியிருப்புகளும் கொண்ட ஔரையா நகரத்தின் மக்கள் தொகை 87,736 ஆகும். அதில் 46,196 ஆண்கள் மற்றும் 41,540 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.16 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.25 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 15.42 % மற்றும் வீதம் 0.03 % உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.26% , இசுலாமியர் 12.39% மற்றும் பிற சமயத்தினர் 0.34% வீதம் உள்ளனர். [1]

போக்குவரத்து

[தொகு]

ஔரையா நகரத்திற்கு வடக்கே 17.0 கிலோ மீட்டர் தொலைவில் பிரபுந்து எனும் ஊரில் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரையா&oldid=4242816" இலிருந்து மீள்விக்கப்பட்டது