ஔரங்கபாதி மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔரங்காபாதி மகால்
இறப்பு1688கள்
பிஜாப்பூர், முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
ஔரங்காபாதி மகால் கல்லறை, பிஜாப்பூர்
துணைவர்ஔரங்கசீப்
குழந்தைகளின்
பெயர்கள்
மெகர்-உன்-நிசா பேகம்
மதம்இசுலாம்

ஔரங்காபாதி மகால் (Aurangabadi Mahal) (தமிழில்; "சிம்மாசனத்தின் செழிப்பு" என்று பொருள்) [1] (இறப்பு 1688) இவர் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மனைவியாவார்.

தோற்றம்[தொகு]

ஔரங்காபாதி மகால் ஒன்று அவுரங்காபாத்த்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்,[2] அல்லது அவுரங்காபாத் நகரத்திலிருந்த அழைத்து வந்த ஔரங்கசீப்பின் அந்தப்புர மகளிர் குழுவில் இருந்திருக்கலாம்.[3] இவர் சியார்சியாவைச் சேர்ந்தவராகவோ அல்லது காக்கேசிய இனத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். [4] பேரரசர் அக்பரின் ஆட்சியில் இருந்து, ஏகாதிபத்திய அந்தப்புரப் பெண்களின் பெயர்கள் பொதுவில் குறிப்பிடப்படக்கூடாது. அவர்கள் பிறந்த இடத்திலிருந்தோ அல்லது நகரத்திலிருந்தோ அல்லது அவர்கள் ஏகாதிபத்திய அரண்மனைக்குள் நுழைந்த நாட்டின் பெறப்பட்ட சில பெயர்களால் குறிப்பிடப்பட வேண்டும். [5]

திருமணம்[தொகு]

28 செப்டம்பர் 1661 அன்று, இவர் ஔரங்கசீப்பின் இளைய மகள், மெகர்-உன்-நிசா பேகத்தைப் பெற்றெடுத்தார். இவர் தன் தந்தையின் ஒன்பதாவது குழந்தையும், தன்னுடைய தாயின் ஒரே குழந்தையும் ஆவார்.[6]

மார்ச் 1680 இல், ஔரங்காபாதியும் பேரரசர் ஔரங்கசீப்புக்கும் அவரது தலைமை மனைவி தில்ராஸ் பானு பேகத்துக்கும் பிறந்த மூத்த குழந்தையுமான இளவரசி ஜெப்-உன்-நிசா பேகத்தையும் தில்லியிலிருந்து அஜ்மீருக்கு அழைத்து வர யாலங்தோஷ் கான் பகதூர் என்பவர் அனுப்பப்பட்டார்.[7] இவர்கள் இருவரும் மே மாதம் அஜ்மீர் சென்றடைந்தனர், இளவரசர் முகமது ஆசம் ஷா இவர்களை வரவேற்றார். அவர் இவர்களை ஏகாதிபத்திய அந்தப்புறத்துக்கு அனுப்பி வைத்தார்.[8] இருப்பினும், பிப்ரவரி 1681 இல், இளவரசர் முகம்மது அக்பர் மிர்சா தனது தந்தை ஔரங்கசீப்புக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கியபோது, அவுரங்கபாதி தில்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவருடன் இளவரசர் முகம்மது அக்பர் மிர்சாவின் மனைவி மற்றும் இளவரசர் சுலைமான் சிகோ மிர்சாவின் மகள் சலீமா பானு பேகம் ஆகியோரும் உடன் சென்றனர்.[9]

மார்ச் 1686 இல், பிஜப்பூர் கோட்டையைக் கைப்பற்ற ஔரங்கசீப்பின் அணிவகுப்புக்கு முன், கான் ஜஹான் பகதூர், ஔரங்கபாதியை அழைத்து வர புர்ஹான்பூருக்கு அனுப்பப்பட்டார். இவருக்காக அவனிடம் ஒரு மரகத மணி செய்து அனுப்பப்பட்டது. மே 1686இல் திலியில் இருந்து சோலாப்பூரில் இருந்த ஔரங்கசீப்பின் முகாமுக்கு சென்றார். இளவரசர் முகம்மது காம் பக்ச் மிர்சா அவர்களால் தியோரி அருகே கோட்டையின் வாசலில் வரவேற்கப்பட்டார். [10] இவர் ஔரங்கசீப்பைப் பின்பற்றி பிஜப்பூர் சென்றார், செப்டம்பர் 1686 இல் பிஜப்பூர் கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கேயே இருந்தார்.

இறப்பு[தொகு]

நவம்பர் 1688 இல், நகரத்தில் பிளேக் நோய் பரவியபோது, இவர் பிஜாப்பூரிலேயே வசித்து வந்தார். இந்த பிளேக் பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்தது, மேலும் அதில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவரது மரணத்திற்குப் பிறகு, "மா'ஆசிர்-இ-ஆலம்கிரி" என்ற நூலில் எழுத்தாளர் சாகி முஸ்தாத் கான் இவரை "பேரரசர் மீது மீது மிகுந்த அபிமானம் கொண்டவர், வயதான மற்றும் அர்ப்பணிப்புள்ள தாதி" என்று விவரித்தார்.[11]

ஜெப்-அன்-நிசா பேகம் இவரது நோயைப் பற்றி கேள்விப்பட்டபோது, அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஏனென்றால் இவர் எப்போதும் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். இவரது மரணத்திற்குப் பின்னர், ஔரங்கசீப்பின் இளைய மற்றும் மிகவும் பிரியமான மறுமனையாட்டியும் இளவரசர் கம் பக்சியின் தாயுமான உதய்புரி மகால் என்பவருக்கு இருந்த போட்டியாளர் இல்லாமல் போனது.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manucci. Storia Do Mogor: Or, Mogul India, 1653-1708 - Volume 2. https://archive.org/details/pli.kerala.rare.17155. 
  2. Iftikhar, Rukhsana (June 6, 2016). Indian Feminism: Class, Gender & Identity in Medieval Ages. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-386-07373-0. 
  3. Sarkar, Sir Jadunath (1973). 1618-1659. Orient Longman. 
  4. Krieger-Krynicki, Annie. Captive Princess: Zebunissa, Daughter of Emperor Aurangzeb. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-195-79837-1. 
  5. Eraly, Abraham (January 1, 2007). The Mughal World: Life in India's Last Golden Age. Penguin Book India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-143-10262-5. 
  6. Sarkar 1947, ப. 323.
  7. Sarkar 1947, ப. 117.
  8. Sarkar 1947, ப. 119.
  9. Sarkar 1947, ப. 126.
  10. Sarkar 1947, ப. 166-7.
  11. Sarkar 1947, ப. 192.
  12. Sarkar, Jadunath (1912). History of Aurangzib mainly based on Persian sources: Volume 1 - Reign of Shah Jahan. M.C. Sarkar & sons, Calcutta. பக். 64. 

உசாத்துணை[தொகு]

  • Sarkar, Jadunath (1947). Maasir-i-Alamgiri: A History of Emperor Aurangzib-Alamgir (reign 1658-1707 AD) of Saqi Mustad Khan. Royal Asiatic Society of Bengal, Calcutta. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔரங்கபாதி_மகால்&oldid=3281170" இலிருந்து மீள்விக்கப்பட்டது