ஔரங்கசீப் கல்லறை
ஔரங்கசீப்பின் கல்லறை | |
---|---|
![]() ஔரங்கசீப் கல்லறையின் உட்புறம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கல்ல்றை |
கட்டிடக்கலை பாணி | முகலாயக் கட்டிடக்கலை |
இடம் | குல்தாபாத், சத்திரபதி சம்பாஜி நகர், மகாராட்டிரம், இந்தியா |
ஆள்கூற்று | 20°0′18.13″N 75°11′29.04″E / 20.0050361°N 75.1914000°E |
கட்டுமான ஆரம்பம் | 4 மார்ச் 1707 |
நிறைவுற்றது | 1707 |
திறக்கப்பட்டது | 1707 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | முகமது ஆசம் ஷா |
ஔரங்கசீப் கல்லறை (Tomb of Aurangzeb[1]), இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை, மகாராட்டிரம் மாநிலத்தின் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்திரபதி சம்பாஜி நகருக்கு வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குல்தாபாத் எனும் சிற்றூரில், மறைந்த சூபி அறிஞர் சேக் ஜெயினுதீன் சிராசி[2] தர்கா வளாகத்தில் உள்ளது.
பின்னணி
[தொகு]தக்காண பீடபூமி பகுதியில் படைகளுடன் பாசறையில் தங்கியிருந்த முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் (3 நவம்பர்1618 – 3 மார்ச் 1707) உடல் நலிவு காரணமாக தனது 89வது அகவையில் இயற்கை எய்தினார். ஔரங்கசீப் எழுதிய உயிலில் தனது கல்லறையை மிகவும் எளிமையாக கட்டப்பட வேண்டும் எழுதி வைத்திருந்தார். அதன்படி அவரது உடலை, அவரது மூத்த மகன் முகமது ஆசம் ஷா தற்கால மகாராட்டிரம் மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத் எனும் சிற்றூரில், மறைந்த சூபி அறிஞர் சேக் ஜெயினுதீன் சிராசி தர்கா வளாகத்தில் எளிமையான முறையில் அடக்கம் செய்தார்.[3]