உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ கேப்டன்! மை கேப்டன்!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Whitman's notes for a revision of "O Captain! My Captain!"

ஓ கேப்டன்! மை கேப்டன்! (O Captain! My Captain!) என்பது 1865 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் மரணம் பற்றி வால்ட் விட்மேன் எழுதிய ஒரு நீட்டிக்கப்பட்ட உருவகக் கவிதையாகும். இந்த கவிதை முதன்முதலில் "டிரம்-டாப்ஸ்" என்ற துண்டுப்பிரசுரத்தில் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றி 18 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கவிதை துக்கத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது.

வால்ட் விட்மேன் "ஓ கேப்டன்! மை கேப்டன்!" கவிதையை 1865 ஆம் ஆண்டில் ஆபிரகாம் லிங்கனின் படுகொலைக்குப் பிறகு எழுதினார். ஆரம்பத்தில் அவர் லிங்கன் மீது அக்கறையற்றவராக இருந்தார். லிங்கனின் நற்பண்பு குடியரசுத் தலைவரை நேசிக்க வைத்தது. ஓ கேப்டன்! மை கேப்டன்! "விட்மேனின் மிக பிரபலமான நான்கு கவிதைகளில் இதுவும் ஒன்று.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, விட்மேன் வாசிங்டன், டி. சி.க்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் அரசாங்கத்திற்காக பணியாற்றினார். மேலும், மருத்துவமனைகளில் தன்னார்வத் தொண்டு செய்தார். அவர் லிங்கனை சந்திக்கவில்லை என்றாலும், அவருடன் ஒரு தொடர்பை உணர்ந்தார். லிங்கனின் படுகொலையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். "மை கேப்டன்" முதன்முதலில் நவம்பர் 4, 1865 இல் தி சாட்டர்டே பிரஸ்ஸில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் டிரம்-டாப்ஸின் தொடர்ச்சியில் வெளிவந்தது. பின்னர் அவர் அதை லீவ்ஸ் ஆப் கிரீவ்ஸ் என்றத் தொகுப்பில் சேர்த்தார். லிங்கனின் மரணம் குறித்த பல விரிவுரைகளில் கவிதையை வாசித்தார்.

பின்னணி

[தொகு]

வால்ட் விட்மேன் 1850 களின் பிற்பகுதியிலிருந்து 1860 களின் முற்பகுதியில் 1855 இல் வெளியான லீவ்ஸ் ஆப் கிரீவ்ஸ் மூலம் ஒரு கவிஞராக தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். விட்மேன் ஒரு தனித்துவமான அமெரிக்க காவியத்தை எழுத விரும்பினார். கிங் ஜேம்ஸ் விவிலியத்தின் கேடன்ஸால் ஈர்க்கப்பட்ட ஒரு புதுக்கவிதைபாணியை உருவாக்கினார்.[1][2] 1855 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட சுருக்கமான தொகுதி, சிலரால் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டது.[3] விமர்சகர்கள் குறிப்பாக விட்மேனின் பாலியல் மற்றும் கவிதையின் "ஓரினமான மேலோட்டங்கள்" பற்றிய அப்பட்டமான சித்தரிப்புகளை எதிர்த்தனர்.[4] அமெரிக்க ஆழ்நிலை விரிவுரையாளரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ எமேர்சனின் லீவ்ஸ் ஆஃப் கிராஸிற்கான பாராட்டுகளைத் தொடர்ந்து விட்மேனின் பணி குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது.[5][6]

சான்றுகள்

[தொகு]
  1. Miller 1962, ப. 155.
  2. Kaplan 1980, ப. 187.
  3. Loving 1999, ப. 414.
  4. "CENSORED: Wielding the Red Pen". University of Virginia Library Online Exhibits. பார்க்கப்பட்ட நாள் October 28, 2020.
  5. Callow 1992, ப. 232.
  6. Reynolds 1995, ப. 340.
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_கேப்டன்!_மை_கேப்டன்!&oldid=3725936" இலிருந்து மீள்விக்கப்பட்டது