ஓ. பு. செயிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓ. பி. செயிசா
தனித் தகவல்கள்
முழுப் பெயர் ஓர்ச்சட்டேரி புதியவீட்டில் செயிசா
தேசியம் இந்தியர்
பிறந்த நாள் 23 மே 1983 (1983-05-23) (அகவை 35)
பிறந்த இடம் கேரளம், இந்தியா
விளையாட்டு
நாடு  இந்தியா
விளையாட்டு தடகள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்) இடைத் தொலைவு
5000 மீட்டர்கள்
மாரத்தான்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை மாரத்தான்: 2:34:43 தே.சா (பெய்ஜிங் 2015)[1]
 
பதக்கங்கள்
மகளிர் தடகள விளையாட்டுக்கள்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 தோகா 5000 மீ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் 1500 மீ
இற்றைப்படுத்தப்பட்டது 30 ஆகத்து 2015.

செயிசா ஓர்ச்சட்டேரி புதிய வீட்டில் (Jaisha Orchatteri Puthiya Veetil, மலையாளம்: ഒ. പി. ജെയ്ഷ: ஓ.பி.ஜெய்ஷா) (பிறப்பு மே 23, 1983(1983-05-23) ), பரவலாக ஓ. பி. செயிசா, கேரளத்தைச் சேர்ந்த இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். மகளிருக்கான மாரத்தானில் தற்போதைய தேசியச் சாதனைக்கு உரிமையாளர். பெய்ஜிங்கில் நடந்த 2015 உலக தடகளப் போட்டிகளின் போது 2:34:43 நேரத்தில் ஓடி இச்சாதனையைப் புரிந்தார்.[2]இச்சாதனை ஓட்டத்தின்போது முன்னதாக மும்பை மாரத்தானில் அதே ஆண்டு தானே நிலைநிறுத்தியிருந்த 2:37:29 நேரத்தையும் முறியடித்தார்.[3] 3000 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் முன்னாள் தேசிய சாதனையாளராவார். 2016 ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான 42 கிலோ மீட்டர் மாரத்தானில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று எண்பத்து ஒன்பதாவதாக போட்டியை நிறைவு செய்தார்.

பங்கேற்புப் பதிகை[தொகு]

ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
 இந்தியா சார்பில்
2005 ஆசிய உள்ளரங்கப் போட்டிகள் பேங்காக் 1வது 1500 மீட்டர்கள் 4:15.75
1வது 3000 மீட்டர்கள் 9:38.43
2006 ஆசிய உள்ளரங்கப் போட்டிகள் பட்டாயா 2வது 1500 மீட்டர்கள் 4:18.50
3வது 3000 மீட்டர்கள் 9:26.72
2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தோகா 3வது 5000 மீட்டர்கள் 15:41.91
2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இஞ்சியோன் 3வது 1500 மீட்டர்கள் 4:13.46
2015 மும்பை மாரத்தான் மும்பை 8வது மாரத்தான் 2:37:29 தேசியச் சாதனை
உலக தடகள்ப் போட்டிகள் பெய்ஜிங் 18வது மாரத்தான் 2:34:43 தேசியச் சாதனை
2016 2016 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோ 89வது மாரத்தான் 2:47.19

சர்ச்சைகள்[தொகு]

2016ஆம் ஆண்டு இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மாரத்தான் போட்டியின்போது இந்திய அதிகாரிகள் குடிநீர், ஆற்றலுணவு வழங்காததால் தான் உயிரிழக்கும் நிலைக்கு சென்றதாக ஓ.பி.செயிசா குற்றம்சாட்டினார். இவர் இரண்டு மணி நேரம் நாற்பத்து ஏழு விநாடிகளில் எல்லைக் கோட்டைத் தொட்டு மயங்கி விழுந்தார். இவரின் குற்றம்சாட்டினை இந்திய தடகள ஆணையம்[4] முற்றிலுமாக மறுத்துள்ளது.[5] ஜெயிசாவும் கவிதா ரவுத்தும் எவ்வித உதவியும் தங்களுக்கு வேண்டாம் என முன்பே கூறியதாகவும் தடகள ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதனையொட்டி ஊடகங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது. பின்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், விளையாட்டுத்துறை இணை செயலர் மற்றும் இயக்குநர் ஆகிய இருவர் கொண்ட குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பு._செயிசா&oldid=2454063" இருந்து மீள்விக்கப்பட்டது