ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவை (2001–02)
Appearance
2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றதையடுத்து ஜெ. ஜெயலலிதா மே 15 அன்று முதல்வராக பதவியேற்றார். நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட ஜெயல்லிதாவை முதல்வராக நியமித்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற அமர்வு 2001 செப்டம்பர் 21 அன்று தீர்ப்பு வழங்கியதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். அதையடுத்து அன்றே ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். ஜெயலிலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதையடுத்து ஜெயலலிதா 2002 மார்ச் முதல் நாளில் மீண்டும் முதல்வரானார். இந்த இடைப்பட்டக் காலத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தொடர்ந்தது.
அமைச்சரவை
[தொகு]அமைச்சரவை 2001 திசம்பர் 30 அன்று இருந்தவாறு:[1]
வ. எண் | அமைச்சர் பெயர் | ஒளிப்படம் | அமைச்சர் | கவனிக்கும் துறைகள் | |
---|---|---|---|---|---|
1. | ஓ. பன்னீர்செல்வம் | முதலமைச்சர் | பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பிற இந்திய ஆட்சிப்பணிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, இலஞ்ச ஒழிப்பு, சிறுபான்மையினர் நலம், தகவல் தொழில்நுட்பம், வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புக்ள், துணை ஆட்சித் தலைவர்கள், பத்திரப்பதிவு, முத்திரைத் தாள், எழுதுபொருள் மற்றும் அச்சகம், அரசு அச்சகம், பூதானம் மற்றும் கிராமதானம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை, கரும்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகியன. | ||
2. | சி. பொன்னையன் | நிதி மற்றும் சட்டத்துறை அமைச்சர் | நிதி. திட்டம், தேர்தல் மற்றும் சட்டப்பேரவை,சட்டம், நீதிமன்றங்கள்,சிறைகள், அளவுகளும் எடைகளும், கடன் நிவாரணம், சீட்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு போன்றவை. | ||
3. | மு. தம்பிதுரை | கல்வித்துறை அமைச்சர் | கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட கல்வி, சட்டமன்றம், தேர்தல்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்டவியல், விளையாட்டு மற்றும் இளைஞர் பணிநலம், ஆவணக்காப்பகம், தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்க் கலாச்சாரம், வெளிநாடுவாழ் இந்தியர், அகதிகள் ஆகியன. | ||
4. | டி. ஜெயக்குமார் | மின்சாரத் துறை அமைச்சர் | மின்சாரம், மரபுசாரா எரிசக்தி வளர்ச்சி ஆகியன. | ||
5. | பி. சி. இராமசாமி | இந்து அறநிலையத் துறை அமைச்சர் | இந்து அறநிலையத் துறை. | ||
6. | எஸ். செம்மலை | நலவாழ்வுத் துறை அமைச்சர் | நலவாழ்வு, மருத்துவக் கல்வி, குடும்ப நலம் ஆகியன. | ||
7. | சி. துரைராஜ் | உள்ளாட்சி நிர்வாக அமைச்சர் | நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கிராமப்புற கடன், நகரம் மற்றும் கிராம தண்ணீர் வழங்கல் ஆகியன. | ||
8. | ஏ. அன்வர் ராஜா | தொழிலாளர் நலத் துறை அமைச்சர் | தொழிலாளர், வேலைவய்ப்பு மற்றும் பயிற்சி, நகர மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள், சென்சஸ் மற்றும் வகுப்பு வாரியம் ஆகியன. | ||
9. | கே. பாண்டுரங்கன் | தொழில் துறை அமைச்சர் | தொழிற்சாலைகள், இரும்பு மற்றும் உருக்கு கட்டுப்பாடு, சரங்கம் மற்றும் கனிமம், மின்னணு ஆகியன. | ||
10. | பி. தனபால் | கூட்டுறவுத் துறை அமைச்சர் | கூட்டுறவு, உணவு, பொதுவழங்கல், நுகர்வோர் நலன், விலைக்கட்டுப்பாடு மற்றும் புள்ளியியல் ஆகியன. | ||
11. | என். தளவாய் சுந்தரம் | பொதுப்பணித்துறை அமைச்சர் | பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்பாசனம் ஆகியன. | ||
12. | எஸ். எஸ். திருநாவுக்கரசு | சுற்றுச்சூழல் துறை அமைச்சர் | தகவல், விளம்பரம், திரைப்பட்த் தொழில்நுட்பம், திரைப்படச் சட்டம், செய்தி அச்சு கட்டுப்பாடு மற்றும் வனம் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகியன. | ||
13. | ஆர். ஜீவரத்தினம் | வேளாண்மைத் துறை அமைச்சர் | வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவை, கூட்டுறவு, தோட்டத்தொழில், கரும்பு வரி, கரும்பு வளர்ச்சி ஆகியன. | ||
14. | ஆர். சரோசா | சுற்றுலாத் துறை அமைச்சர் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகியன. | ||
15. | வி. சுப்பிரமணியன் | ஆதிதிராவிடர் நலத்துறை | ஆதிதிராவிடர் நலன், பழங்குடியினர், ஒப்பந்தத் தொழிலாளர்கள், முன்னாள் இராணுவத்தினர் நலன் ஆகியன. | ||
16. | எஸ். பி. சண்முகநாதன் | கைத்தறித்துறை அமைச்சர் | கைத்தறி மற்றும் துணிகள் ஆகியன. | ||
17. | கே. பி. ராஜேந்திர பிரசாத் | மீன்வளத்துறை அமைச்சர் | மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை ஆகியன. | ||
18. | ஆர். வைத்திலிங்கம் | ஊரகத் தொழில்துறை அமைச்சர் | ஊரக குடிசைத் தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத் தொழிற்சாலைகள், காதி மற்றும் ஊரக தொழில் கழகம் ஆகியன. | ||
19. | சி. சண்முகவேல் | பால் வளத்துறை அமைச்சர் | பால் மற்றும் பால்பண்ணை மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இடப்படாத இனங்கள் ஆகியன. | ||
20. | பி. வி. சண்முகம் | வணிக வரித்துறை அமைச்சர் | வணிக வரி | ||
21. | சே. மா. வேலுசாமி | வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி | வீட்டுவசதி, வீட்டுவசதி மேம்பாடு, நகரத் திட்டம், குடிசைமாற்று, இடக்கட்டுப்பாடு, நகரவளர்ச்சி மற்றும் பெருநகரவளர்ச்சிக் குழுமம் ஆகியன. | ||
22. | நைனார் நாகேந்திரன் | போக்குவரத்துத்துறை அமைச்சர் | போக்குவரத்து, தேசிய போக்குவரத்து, நகரவளர்ச்சி, கோட்டார் வாகனச் சட்டம், துறைமுகங்கள் ஆகியன. |