ஓ.எல்.எக்ஃசு (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
OLX, Inc.
வகைPrivate
நிறுவுகைமார்ச்சு 2006
தலைமையகம்New York, NY
முக்கிய நபர்கள்ஃபேப்ரிஸ் க்ரிண்டா, இணை நிறுவனர்/இணை-CEO மற்றும் அலெக் ஆக்ஸென்ஃபோர்ட், இணை நிறுவனர்/இணை-CEO
தொழில்துறைClassifieds
பணியாளர்ஏறத்தாழ 120
இணையத்தளம்www.olx.com

ஓ.எல்.எக்சு (OLX) என்பது நியூயார்க், புயெனோசு ஏரீசு(Buenos Aires), மாசுக்கோ, பெய்ச்யிங் (Beijing) மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அமைந்திருக்கும் ஒரு இணைய நிறுவனமாகும். இது விளம்பரங்களைத் தரும் நிறுவனம். வீடு-மனை தொடர்பான (நிலைச்சொத்து) வேலைகள், தானுந்துகள், விற்பனைக்கு, சேவைகள், சமுதாயம் மற்றும் தனிநபர் தேவைகள் போன்ற பல வகைப்பிரிவுகளில் உலகெங்கிலுமுள்ள ஏராளமான இடங்களில் பயன்படுத்துபவர்களால் உருவாக்கப்படுகிற இலவச வகைப்படுத்தபட்ட (clssified) விளம்பரங்களை ஓ.எல்.எக்ஃசு (OLX) வலைத்தளம் அளிக்கிறது.

இணையத் தொழில் முனைவோரான ஃவப்ரீசு கிரிண்டா (Fabrice Grinda) மற்றும் அலெக் ஆக்ஃசன்போர்டு (Alec Oxenford) ஆகியோரால் மார்ச் 2006 –ல் இந்த நிறுவனம் இணைந்து நிறுவப்பட்டது. ஃவப்ரீசு கிரிண்டா, இதற்குமுன், சிங்கி , என்ற ஒரு அலைபேசி அழைப்புமணி (ரிங்ட்டோன்கள்) நிறுவனத்தினை நிறுவினார்; அது, மே 2004-ல் 8 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஃபார்-சைடு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.[1][2] அலெக் அவர்கள், முன்னதாக டி ரீமேட்[1] பரணிடப்பட்டது 2018-08-05 at the வந்தவழி இயந்திரம், என்ற லத்தீன் அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் ஏல வலைத்தளம் ஒன்றினை நிறுவினார். டி ரீமேட் நிறுவனம் , நவம்பர் 2005-ல் இ பே இணை நிறுவனமான MercadoLibre.com-க்கு விற்கப்பட்டது

உலகளாவிய வாய்ப்பு[தொகு]

2009 ஏப்ரல் மாதவாக்கில், 91 நாடுகளில் 39 மொழிகளில் OLX கிடைக்கப்பெறுகிறது.[3]. நாடுகள்: அல்ஜீரியா, அர்ஜெண்டைனா, அருபா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹாமாஸ், பங்களாதேஷ், பெலாரஸ், பெல்ஜியம், பெலீஸ், பொலிவியா, ப்ரேசில், பல்கேரியா, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, கோஸ்ட்ட ரீக்கா, குரொயேஷியா, செக் குடியரசு, டென்மார்க், டோமினிகா, டொமினிக்கன் குடியரசு, ஈக்வடார், எல் சால்வடார், எஸ்டோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், கிரெனடா, குவாடமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், ஹாங்காங், ஹங்கேரி, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், ஜோர்டான், கஜக்ஸ்தான், லாட்வியா, லீச்டென்ஸ்டைன், லித்துவானியா, லக்ஸம்பர்க், மலேசியா, மால்ட்டா, மெக்ஸிகோ, மோல்டோவா, மொனாகோ, மொராக்கோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நிக்காரகுவா, நார்வே, பாகிஸ்தான், பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ். போலந்து, போர்ச்சுகல், போர்ட்டோ ரீக்கோ, ரோமானியா, ரஷ்யக் கூட்டமைப்பு, செர்பியா, சிங்கப்பூர், ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்ஜர்லாந்து, தைவான், தாய்லாந்து, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, டுனீசியா, துருக்கி, டர்க்ஸ் மற்றும் காய்க்கோஸ் தீவுகள், உக்ரேன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பிரிட்டன், அமெரிக்கா, உருகுவே, வெனிசுலா, வியட்நாம்

மொழிகள்: பெங்காளி, காட்டலான், சீனம் (மரபுவழி), சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), டச்சு, ஆங்கிலம், பல்கேரியன், குரொயேஷியன், செக், டேனிஷ், எஸ்ட்டோனியன், ப்ரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், ஹீப்ரூ, ஹிந்தி, ஹங்கேரியன், இந்தோனேஷியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், கொரீயன், லாட்வியன், லித்துவானியன், நார்வேஜியன், போலிஷ், போர்த்துகீஸ், ரோமானியன், ரஷியன், ஸெர்பியன், ஸ்லோவாக், ஸ்லோவீன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டாகலோக், தாய், டர்க்கிஷ், உக்ரேனியன், உருது, வியட்நாமீஸ்.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

OLX –ன் சிறப்பு அம்சங்களில் உட்படுபவை:

  • செறிவான HTML விளம்பரங்கள் அமைக்கும் திறம்
  • விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சமுதாய நடவடிக்கைகளின் மீதுள்ள மத்திய கட்டுப்பாடு
  • விருப்பமற்றவற்றின் மீது கட்டுப்பாடுகள்
  • ஃபோட்டோலாக், ஃபேஸ்புக் மற்றும் ஃரெண்ட்ஸ்டர் போன்ற பிற வலைத்தளங்களில் விளம்பரங்களைப் பிரபலப்படுத்தும் திறம்
  • ஆர்வமுடைய பிற பயனாளர்களுடன் விளம்பரங்களைப் பற்றி விவாதிக்கும் திறம்
  • நீங்கள் எங்கு வசிப்பவராயினும் உங்களுக்கு அருகாமையிலுள்ள பொருள்களை/உருப்படிகளைத் தேடுகிற திறம்
  • மொபைல் தொலைபேசியிலிருந்து வலைத்தளத்தினை அணுகும் வசதி
  • பல்வேறு மொழிகளிலும் கிடைப்பது

தகவல் பார்வை[தொகு]

  1. "வெஞ்சர் வாய்சு பேட்டி". http://www.venturevoice.com/2006/04/exclusive_fabrice_grinda_launc_1.html. 
  2. "ஃபோர்ப்ஃசு கட்டுரை 'சிங்கி நிறுவனர் விலகுகிறார்’". http://www.forbes.com/markets/2005/12/01/zingy-mobile-content-1201markets13.html. 
  3. "OLX –ன் எங்களைப் பற்றி’ பக்கம்". http://www.olx.com/about.php. 

வெளிப்புற ‘லிங்க்’குகள்[தொகு]