ஓ… சிய்யான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொத்தியாள் விரல்களை எண்ணல்

ஓ… சிய்யான் ஒரு சிறுவர் விளையாட்டு.

விளையாட்டுத் தொடங்கும்போது சில விளையாட்டுகள் தண்டனை பெறும் விளையாட்டாக அமைந்துவிடும். அப்போது பழமேறியவர் என்றும், பட்டவர் என்றும் விளையாடுவோரைத் தெரிவுசெய்ய வேண்டி வரும். எடுத்துக்காட்டுக்கு ஐந்து என்னும் விளையாட்டை எடுத்துக்கொள்வோம். முதலில் அடி வாங்குபவர் பட்டவர்.

சிய்யான் என்னும் சொல்லுக்குச் சிட்டுக்குருவி என்பது பெயர். (சிய்யான் சிய்யான் குருவி எனத் தொடங்கும் சிறுவர் பாடலும் உண்டு) பட்டவரைத் தீர்மானிக்கும் விளையாட்டுகளுள் ஒன்று.[1] இந்த ஓ… சிய்யான் விளையாட்டு. விளையாட இருப்பவர் இருவர் இருவராகச் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டும் ஓ… சிய்யான் என ஒருசேரக் கூறிக்கொண்டும் அவரவர் விருப்பம் போல் விரல்களை நீட்டிக்கொண்டு தரையில் கைகளை வைப்பதால் இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வந்தது.

ஒவ்வொருவருக்கும் 10 விரல். 2 பேர் விளையாட்டில் இருவருக்கும் 20 விரல். முதலில் ஒருவர் தாம் விரும்பும் எண்ணை 15-க்குள் ஒன்றைச் சொல்வார். (சொன்னவர் கைகளில் ஒன்று விரல்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும். எனவே அதனைக் கழித்து 15.) பின்னர் இருவரும் ஓ… சிய்யான் சொல்லி அவரவர் விருப்பம் போல் விரல்களை நீட்டித் தரையில் கையை வைப்பர். 7 என எண் சொல்லியிருந்தால் இருவர் விரல்களும் ஏழாக இருந்தால் சொன்னவர் பழம். இல்லாவிட்டால் அடுத்தவர் எண் சொல்ல ஆட்டம் தொடங்கும்.

4 பேர், 5 பேர் என்று விளையாடும் விளையாட்டாயின் இருவர் இருவராகச் சேர்ந்து விளையாடிப் பழமாவர். பின் தோற்றவர் இணைந்தாடி ஒரே ஒரு பட்டவர் மிஞ்சும் வரையில் ஆடிப் பழம் பெறுவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. முனைவர் எம். எஸ். மதிவாணன் (சூலை 2015). "தமிழர்களின் விளையாட்டு". மின்தமிழ் மேடை (2): 4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ…_சிய்யான்&oldid=1946066" இருந்து மீள்விக்கப்பட்டது