ஓஸ்போர்ன் ஸ்மித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓஸ்போர்ன் ஸ்மித்

ஓஸ்போர்ன் ஸ்மித்  (Sir Osborne Arkell Smith, 26 திசம்பர் 1876- 30 ஆகசுடு 1952) இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநராக இருந்தவர்.  இவர் 1935 ஏப்பிரல் மாதம் முதல் தேதி முதல் 1937 சூன் 30 வரை ஆளுநர் பதவியில் இருந்தார்.[1]

பணிகள்[தொகு]

நியூ தெற்கு வேல்ஸ் வங்கியில் 20 ஆண்டுகளும், காமன்வெல்த் பாங்கு ஆப் ஆத்திரேலியாவில் 10 ஆண்டுகளும் பணியாற்றினார். 1926 இல் இந்தியாவுக்கு வந்தார். இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் மேலாண் ஆளுநராகப் பதவி வகித்தார். இவருக்கு தகைசால் பட்டம்  ஒன்றை இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு இர்வின் அளித்தார். மேலும் சில பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இம்பிரியல் வங்கியில் ஆற்றிய பணிகளினால்  ஒஸ்போர்ன் ஸ்மித் இந்திய வங்கி வட்டாரங்களில் பேர் விளங்கியவர் ஆனார். பண மாற்று விகிதம் நிர்ணயிப்பதிலும் வட்டி விகிதங்கள் நிர்ணயிப்பதிலும்  இந்திய அரசுடன் கருத்து முரண் ஏற்பட்டதால் இவர் பதவிக் காலம் நிறைவுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகினார். இவர் காலத்தில் இந்திய ரூபாய்த் தாள்களில் இவர் கைச்சாத்து இடவில்லை.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓஸ்போர்ன்_ஸ்மித்&oldid=2693249" இருந்து மீள்விக்கப்பட்டது