ஓசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓஸோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓசோன்
Ozone-1,3-dipole.png
Ozone-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூன்றாக்சிசன், Trioxygen
இனங்காட்டிகள்
10028-15-6
பண்புகள்
O3
வாய்ப்பாட்டு எடை 47.998 g·mol−1
தோற்றம் நீல நிற வளிமம்
அடர்த்தி 2.144 g·L−1 (0 °C), வளிமம்
உருகுநிலை
கொதிநிலை 161.3 K, −111.9 °C
0.105 g·100mL−1 (0 °C)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
+142.3 kJ·mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
237.7 J·K−1.mol−1
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Oxidant (O)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறு (சேர்மம்). இது வளிம நிலையில் உள்ளது. ஆக்சிசனின் பிறிதொரு மாற்றுரு (allotrope). இது ஈரணு ஆக்சிசன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. எளிதில் சிதைந்து விடும். தரைக்கு அருகே காணப்படும் ஓசோன் சூழல் மாசுத்தன்மை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் மாந்தர்கள் உட்பட, விலங்குகள் பலவற்றின் மூச்சு இயக்கத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஆனால் நில உலகின் காற்றுமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் வளி, உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் அளவைக் குறைக்கின்றது. தொழிலகங்களில் ஓசோன் வளி பலவகையான பயன்பாடுகள் கொண்டுள்ளன (தூய்மைப்படுத்துவது அவற்றுள் ஒன்று).

1840 இல் கிறிசுட்டியன் பிரீடரிச் இழ்சோன்பைன் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடுத்து, அது ஒருவகையான "நாற்றம்" (ஒரு வகையான மணம்) தருவது பற்றி கிரேக்க மொழியில் உள்ள ஓசைன் என்னும் வினைச்சொல்லில் இருந்து (ozein, ὄζειν, "to smell", "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார்[1][2]. ஆனால் மூன்று ஆக்சிசன் அணுக்கள் சேர்ந்த வேதிப்பொருள் ஓசோன் (O3) என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, 1865 இல் இழ்சாக் லூயி சோரெ (Jacques-Louis Soret) என்பார் செய்த ஆய்வுக்கு முன்னர் அறியப்படவில்லை[3], இது பின்னர் இழ்சோன்பைன் அவர்களால் 1867 இல் உறுதி செய்யப்பட்டது[1][4]. ஒரு வேதிப்பொருளின் மாற்றுரு (allotrope)வாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.

இயற்பியல் பண்புகள்[தொகு]

பெரும்பாலானவர்கள் காற்றில் ஒரு மில்லியனில் 0.01 பங்கு (0.01 ppm) இருந்தாலே உணரமுடியும். மில்லியனில் 0.1 முதல் 1 பங்கு அளவு முகர நேர்ந்தால் தலைவலியும், கண் எரிச்சலும், மூச்சுக்குழல் அரிப்புணர்வும் பெறுவர்[5]. வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது[6]. ஓசோன் மென்எதிர்வ காந்தத் தன்மை (diamagnetic) கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Rubin, Mordecai B. (2001). "The History of Ozone. The Schönbein Period, 1839-1868" (PDF). Bull. Hist. Chem. 26 (1). http://www.scs.uiuc.edu/~mainzv/HIST/awards/OPA%20Papers/2001-Rubin.pdf. பார்த்த நாள்: 2008-02-28. 
  2. "Today in Science History". பார்த்த நாள் 2006-05-10.
  3. Jacques-Louis Soret (1865). "Recherches sur la densité de l'ozone". Comptes rendus de l'Académie des sciences 61: 941. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k3018b/f941.table. 
  4. "Ozone FAQ". Global Change Master Directory. பார்த்த நாள் 2006-05-10.
  5. Nicole Folchetti, தொகுப்பாசிரியர் (2003). "22". Chemistry: The Central Science (9th Edition ). Pearson Education. பக். 882–883. ISBN 0-13-066997-0. 
  6. "Oxygen". WebElements. பார்த்த நாள் 2006-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசோன்&oldid=2482170" இருந்து மீள்விக்கப்பட்டது