உள்ளடக்கத்துக்குச் செல்

ஓவ் கிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவ் கிட்
Ove Gjedde
கரெல் வான் மான்டர் III வரைந்த, அட்மிரல் ஓவ் கிட்டின் உருவப்படம்.
தரங்கம்பாடியின் 1-ஆவது ஆளுநர்
பதவியில்
11 அக்டோபர் 1620 – 13 பெப்ரவரி 1621
ஆட்சியாளர்நான்காம் கிறித்தியான்
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்ரோலண்டு கிராப்பே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1594-12-27)27 திசம்பர் 1594
தொமார்ப்பு குங்சுகார்ட் அரண்மனை, இசுக்கானியா
இறப்பு19 திசம்பர் 1660(1660-12-19) (அகவை 65)
கோபனாவன்
தேசியம்டானியர்
துணைவர்டொரத்தி ஊர்னி
பிள்ளைகள்7
பெற்றோர்புரோசுட்ரொப் கிட்
டொரத்தி உஃபெல்ட்
இராணுவ சேவை
பற்றிணைப்பு டென்மார்க்–நோர்வே 1616–1645
தரம்அட்மிரல்
லெப். கர்னல்
போர்கள்/யுத்தங்கள்
  • டோர்சுடென்சன் போர்

ஓவ் கிட் (Ove Gjedde; 27 திசம்பர் 1594 – 19 திசம்பர் 1660) டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு பிரபுவும், கடற்படை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியாவில் தரங்கம்பாடியில் தானிசுக் குடியேற்றத்தைத் தொடங்கி அங்கு தானிசுக் குடியேற்றத்திற்கான தளமாக தானிசுக் கோட்டையையும் கட்டினார். இவர் டென்மார்க்கின் நான்காம் கிறித்தியான் மன்னரின் இறப்பிற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.[1]

தொடக்க வாழ்க்கை

[தொகு]
1680 இல் தொமார்ப்சு குங்சுகார்டு அரண்மனை

கிட் டென்மார்க்கின் இசுக்கானியா மாவட்டத்தில் 1594 ஆம் ஆன்டில் பிறந்தார்.[2] சோர்ஃப் அக்காதமியில் கல்வி பயின்றார். 1616 இல் தானிசு நீதித்துறைப் பணியகத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[3][4]

பணி

[தொகு]

1618 மார்ச் மாதத்தில், தானிசுக் கிழக்கிந்தியக் கம்பனியின் சீன, கிழக்கிந்திய வணிகத்திற்கான தளமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தானிசுக் குடியேற்றத்தை நிறுவ இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இவரது தலைமையில் கடற்படைக் குழு ஒன்று சென்றது. இவரது கடற்படையில் தானிசுக் கடற்படைக் கப்பல்களான எலெஃபான்டன், டேவிட், இரெசுண்ட் என்ற படகு, வணிகக் கப்பல்கள் இரண்டு ஆகியன சென்றன.[5] 1620 இல் தரங்கம்பாடியில் தான்சுபோர்க் கோட்டையை (தானிசுக் கோட்டை) நிறுவினார்.[6] இது 200 ஆண்டுகளுக்கு தானிசுக் குடியேற்றமாக இருந்தது. கிட் 1922 மார்ச்சில் திரும்பி வந்து புருன்லா லென்னின் (இன்றைய அக்கெர்சுசு) ஆட்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்டார்.[7]

கிட் நோர்வேயில் நில சொத்துக்களை வாங்கினார், சுரங்கத் தொழிலில் ஒரு முக்கிய பங்கேற்பாளராக இருந்தார், 1623 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காங்ஸ்பெர்க் வெள்ளிச் சுரங்க முயற்சியிலும் ஒரு பங்காளியானார். 1628 ஆம் ஆண்டில் வெள்ளிச் சுரங்க நிறுவனம் ஒரு தனியார் கூட்டாண்மையாக மாற்றப்பட்டபோது, ​​ஓவ் கிட் 25% பங்கைப் பெற்றார், 1630 முதல் அவர் அதன் இயக்குநராக இருந்தார். 1657 ஆம் ஆண்டில், அவர் தனது மைத்துனர் பிரெபென் வான் அகுனெனுடன் சேர்ந்து இரும்புச் சாலையை நிறுவினார்.[7]

1628 ஆம் ஆண்டில், அகெர்சசு படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டார். டோர்ஸ்டென்சன் போரில் (1643–1645) அட்மிரலாகப் பங்கேற்றார், 1645 ஆம் ஆண்டில் ரீல்மின் அட்மிரலாக நியமிக்கப்பட்டார். 1648 ஆம் ஆண்டில் எல்சிங்போர்க் கோட்டையின் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது.[8]

பிற்கால வாழ்க்கை

[தொகு]

ரோசுகில்டே அமைதிப் பேச்சிற்குப் பிறகு, டென்மார்க் சுவீடனிடம் எசுக்கானியாவை இழந்தது. 1658 ஆம் ஆண்டு சுவீடன் மன்னர் சார்லஸ் பத்தாம் குசுத்தாவ் அமைதி உடன்பாட்டை மீறியபோது, ஓவ் கிட் எல்சிங்போர்க்கிற்கு வருகை தந்தபோது சிறைப்பிடிக்கப்பட்டார். அவர் முதலில் எல்சிங்போர்க் கோட்டையில் உள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார், பின்னர் மால்மோவுக்கு அனுப்பப்பட்டார். 1660 ஆம் ஆண்டில் சுவீடனுக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் போது அவர் விடுவிக்கப்பட்டார். அந்த நேரத்தில் கிட் ஒரு வயதான, உடல் ரீதியாக பலவீனமான மனிதராக இருந்தார், கிட் 1660 இல் கோபனாவனில் இறந்தார்.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Haandfæstning". guideservicedanmark.dk. Retrieved January 1, 2019.
  2. "Historia". Tomarps Kungsgård. Retrieved January 1, 2019.
  3. 3.0 3.1 Jørgen Marcussen. Ove Gjedde - Admiral, 1594-1660 (in Danish)
  4. Erik Opsahl. "Ove Gjedde". Store norske leksikon. Retrieved January 1, 2019.
  5. Charukesi Ramadurai. Trankebar
  6. Datta, Rangan (15 June 2022). "Tranquebar — A piece of Denmark on the coast of the Bay of Bengal". My Kolkata. The Telegraph. https://www.telegraphindia.com/my-kolkata/places/exploring-the-danish-history-and-coastal-charms-of-tharangambadi-or-tranquebar-near-puducherry-in-tamil-nadu/cid/1870111. 
  7. 7.0 7.1 Rian, Øystein "Ove Gjedde". Norsk biografisk leksikon. Ed. Helle, Knut. Oslo: Kunnskapsforlaget. 
  8. Th. Topsøe-Jensen. "Ove Gjedde". Dansk Biografisk Leksikon, Gyldendal. Retrieved January 1, 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவ்_கிட்&oldid=4254036" இலிருந்து மீள்விக்கப்பட்டது