ஓவியாவ விட்டா யாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓவியாவ விட்டா யாரு
இயக்கம்இராஜதுரை
தயாரிப்புமதுரை செல்வம்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புசஞ்சீவி
ஓவியா
ஒளிப்பதிவுஈ. கே. நாகராஜன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்வேலம்மாள் சினி டாக்கிஸ்
வெளியீடுமே 24, 2019 (2019-05-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓவியாவ விட்டா யாரு (Oviyavai Vitta Yaru) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ராஜதுரை இயக்கி மற்றும் மதுரை செல்வம் தயாரித்த இப்படத்தில் சஞ்சீவி மற்றும் ஓவியா நடித்தனர். உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி புதிதாக ஓவியாவுக்கு வந்த பிரபலத்தை தொடர்ந்து இப்படத்தின் முந்தைய பெயரை மாற்றி முன்னணி நடிகையின் பெயரே வைக்கப்பட்டது. இப்படத்தில் வைரமுத்து மற்றும் சினேகன் ஆகியோர் பாடல் வரிகளை எழுத சிறீகாந்து தேவா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தொடங்கி, 2019 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

அர்ஜுன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நடிகர்களிடம் ஊடகவியல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய மதுரை செல்வம் இப்படத்தின் வழியாக தயாரிப்பாளராக அறிமுகமானார். ஐ லவ் யூ டா (2002) படத்தை உருவாக்கிய ராஜதுரையை, இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் 2014 சூனில் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. இபடத்தில் சஞ்சீவி மற்றும் ஓவியா முக்கிய வேடங்களில் நடித்தனர். 2014 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் படத்திற்கு விநியோகஸ்தர் அமையாததால் தயாரிப்பாளருக்கு நிதிப் பிரச்சனை ஏற்பட்டது.[1] படத்தின் தயாரிப்பின் போது, தயாரிப்பாளர் தனக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இயக்குனர் மோதலில் ஈடுபட்டார்.[2]

2017 ஆகத்தில், படத்தின் தயாரிப்பாளர் படத்தின் பெயரான சீனி என்பதை ஓவியாவ விட்டா யாரு என்று மாற்றினார். இது ஓவியா என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. தமிழ் உண்மைநிலை நிகழ்ச்சியான பிக் பாசில் முன்னணி நடிகை புகழ் பெற்றதைத் தொடர்ந்து இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. படத்தில் கஞ்சா கறுப்பு , வையாபுரி , பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் பிக் பாஸில் தோன்றிய பிறகு தயாரிப்பாளர் விளம்பரங்களில் முக்கியம் கொடுத்து வெளியிட்டார்.[3][4] தயாரிப்பாளரால் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பது. தாமதங்களுக்குப் பிறகு படம் இறுதியாக 2019 மேயில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[2]

இசை[தொகு]

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வெளியீடு[தொகு]

படம் குறித்த விமர்சனத்தில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தை "பார்க்கலாம் சுமார்" என்று எழுதியது.[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டரை மதிப்பீட்டை வழங்கியது மற்றும் "திரைப்படத்தில் புதிதாக எதுவும் இல்லை, ஈர்க்கக்கூடிய கதையும் இல்லை" என்று எழுதியது.[6]

குறிப்புகள்[தொகு]

 

  1. Vandhana (2014-09-24). "Oviya Shares Screen-Space With an Elephant in Seeni –". Silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  2. 2.0 2.1 "Oviya to the rescue of a producer in trouble". www.indiaglitz.com. 5 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  3. "Producer of 'Bigg Boss' Oviya's film changes title to 'Oviyaava Vitta Yaaru'". The News Minute. 2017-09-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  4. "Producers to release Oviya's pending films". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  5. "Oviyavai Vitta Yaaru movie review: Watchable to some extent". Asianage.com. 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
  6. "Oviyavai Vitta Yaru Movie Review {2.0/5}: Critic Review of Oviyavai Vitta Yaru by Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவியாவ_விட்டா_யாரு&oldid=3659689" இலிருந்து மீள்விக்கப்பட்டது