ஓவன் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஓவன் பறவை

தென் அமெரிக்காவில் ருபௌஸ் ஹோர்நீரோ என்ற பறவை இனம் உள்ளது ..இப்பறவை அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் தேசிய பறவையாக உள்ளது. இப்பறவை ஓவன் பர்ட் என்று அழைக்கபடுகிறது. ஒரு வகையான டச் அடுப்பை போல் இக்கூடு அமைத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

இப்பறவையானது தங்கள் இனப்பெருக்க காலத்தில் களிமண் அல்லது மண்ணோடு நார்பொருட்கள், முடி அல்லது வைக்கோல் சேர்த்து தன் கூட்டை கட்ட துவங்குகின்றன. இக்கூடனது பார்பதற்கு மண்டபம் போன்ற கூரையும் அதன் உள்ளே ஒரு சிறு அறையும் காணப்படும் .

ஆண் பறவையும், பெண் பறவையும் இணைந்து இக்கூடின் சுவர்களை எழுப்புகின்றன .பெரும்பாலும் இது குளிர் காலங்களில் தன் கூட்டை கட்ட துவங்கும். பின் அக்கூட்டின் மேல் சூரிய ஒளி பட்டு அக்கூடு கடினமான பாறை போன்று இறுகிவிடும் வரை விட்டுவிடுகின்றது .

தன் கூட்டை குறுகிய மற்றும் வளைந்த நுழைவு வாயிலை அமைக்கும்.அக்கூட்டின் உள்ளே தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பி இனப்பெருக்க அறையை உருவாக்கும்.அதில் பெண் பறவை முட்டை இடுவதற்கு ஏதுவாக இலைகள்,சிறகுகளை கொண்டு நிரப்பிவிடும். இப்படி செய்வதற்கு இப்பறவைகளுக்கு சில மாதங்கள் ஆகலாம்.

இனச்சேர்க்கைக்கு பிறகு இப்பறவைகள் 3 முதல் 5 முட்டைகள் வரையிடும்.அம்முட்டைகளை அடைகாத்து 20 நாட்களுக்கு பிறகு குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளின் இறக்கைகள் வளர 18 நாட்களும், தன் பெற்றோருடன் 3 மாத காலமும் அக்கூட்டில் தங்கி இருக்கும் .

ஓவன் பறவைகள் மெக்ஸிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் பறவைகளின் ஒரு பெரும் பகுதிகளாக வாழ்கின்றன . இவைகள் நகரின் புறநகர் பகுதிகளிலும் காணலாம் . ஆண் பறவையும், பெண் பறவையும் தங்களுக்கென்று ஒரு தனி பட்ட பாடல் முலம் அறிந்துகொள்கின்றன.. அவை "டி....சர்" என்ற ஒளியை எழுப்புகின்றன...

1916 இல் ராபர்ட் பாரஸ்ட் எனும் கவிஞர் தனது கவிதையில் ஓவன் பர்ட் பற்றிக் குறிப்பிடுகிறார். இப்பறவையை "ஹவுஸ் பில்டர்" என்றும் அழைகின்றனர்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவன்_பறவை&oldid=1599484" இருந்து மீள்விக்கப்பட்டது