உள்ளடக்கத்துக்குச் செல்

ஓலின் இராச்சிக் செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓலின் இராச்சிக் செயல்முறை (Olin Raschig process) என்பது ஐதரசீனை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு வேதிச் செயல்முறையாகும். செருமன் நாட்டு வேதியியலாளர் பிரடெரிக் இராச்சிக் இச்செயல்முறையின் முக்கியமான படிநிலைக்கு 1906 ஆம் ஆண்டிலேயே காப்புரிமை பெற்றார். அமோனியா மற்றும் ஐப்போகுளோரைட்டைப் பயன்படுத்தி மோனோகுளோரமீனை உருவாக்கவும் அதைத் தொடர்ந்து விளைபொருளை அமோனியாவுடன் வினைப்படுத்தி ஐதரசீன் தயாரிப்பதும் காப்புரிமை கோரிய அம்முக்கியமான வினையாகும் [1] இந்த செயல்முறையை ஓலின் நிறுவனம் மேலும் உகந்ததாக பயன்படுத்தி விண்வெளி பயன்பாட்டிற்காக நீரற்ற ஐதரசீனை உற்பத்தி செய்தது [2].

வர்த்தக முறையில் பயன்படுத்தப்படும் ஒலின் இராச்சிக் செயல்முறை பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது:[2]

  • சோடியம் ஐப்போகுளோரைட்டு கரைசலுடன் மும்மடங்கு அதிக அமோனியாவை 5° செல்சியசு வெப்பநிலையில் கலந்து மோனோகுளோரமீன் தயாரிக்கப்படுகிறது.
  • மோனொகுளோரமீன் கரைசலுடன் 30 மடங்கு அதிக அமோனியாவைச் 130° செல்சியசு வெப்பநிலையில் உயர் அழுத்த்த்தில் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் அதிக அளவாக எஞ்சும் அமோனியாவையும் பக்க விளைபொருளாக உருவாகும் சோடியம் குளோரைடையும் நீக்க வேண்டும்.
  • கொதிநிலை மாறா வடிகட்டல் முறையில் நிரையும் அமீனையும் நீக்குதல் வேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. DE patent 192783, Friedrich Raschig, "Verfahren zur Darstellung von Hydrazin.", issued 1906-11-23 
  2. 2.0 2.1 "Hydrazine". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2001). DOI:10.1002/14356007.a13_177.