ஓலன் (துணைக்கறி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓலன்
Olan.jpg
ஓலன் துணைக்கறி
மாற்றுப் பெயர்கள்ഓലൻ
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதி
பகுதிஇந்திய துணைக்கண்டம்
Associatedஇந்திய சமையல்
வேறுபாடுகள்வழக்கமானது, நம்பூதிரி சமையல்

ஓலன் (ஒலிப்பு [oːlan]) என்பது தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் கேரள உணவு வகைகளின் ஒரு துணைக்கறி உணவாகும். இது வெள்ளைப் பூசணி அல்லது சாம்பல் பூசணி, காராமணி (Black-eyed peas), தேங்காய் பால் இஞ்சி ஆகிய காய்கறிகள் சேர்த்து சமைத்த பின்னர் தேங்காய் எண்ணெயில் தாளிக்கப்படுகிறது. இது கேரளாவின் காரமில்லாத சுவை மிக்க துணைக்கறியாகும். [1] இது பொதுவாக ஓணம் பண்ண்டிகையின் போது இடம்பெறும் சத்யா (விருந்தின்) ஒரு பகுதியாக பரிமாறப்படுகிறது. [1]

செய்முறை[தொகு]

கேரள பாணி[தொகு]

தேவையான பொருட்கள்

செய்முறை

  • காராமணியை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  • 3/4 விசில் வரும் வரை வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
  • நறுக்கிய பூசணி, உப்பு மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • சிறிது தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
  • பூசணிக்காய் மற்றும் காராமணி முழுவதுமாக வெந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்.
  • தேங்காய் பால் சேர்த்து 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

வகைகள்[தொகு]

நம்பூதிரி வகை ஓலன் சற்று வித்தியாசமானது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • கேரளாவின் உணவு வகைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sathyendran, Nita (September 10, 2016). "Onam on a leaf". The Hindu. September 20, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலன்_(துணைக்கறி)&oldid=3422718" இருந்து மீள்விக்கப்பட்டது