ஓரேருழவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓரேருழவர் சங்க கால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவர் குறுந்தொகையில் ஒரு பாடலும் [1] புறநானூற்றில் ஒரு பாடலும் [2] பாடியுள்ளார்.

பாடல் தரும் செய்தி[தொகு]

ஒக்கலாகிய ஒத்துப்போகும் உறவினரும் நண்பரும் துணை இருந்தால் யார் எந்தத் துன்பம் தந்தாலும் அத்துன்பத்திலிருந்து விடுபடலாம் என்னும் உலகியல் உண்மை ஓர் உவமை வாயிலாக இதில் சொல்லப்படுகிறது. மேளம் தட்டும்போது அதில் உள்ள தோல் அடிபடுவது போல, ஒருவன் ஒரு மானைச் சேறுபட்ட களர்நிலத்தில் ஓடவைத்துப் பிடிக்க முயல்கிறான். அப்போது அந்த மான் படும் துன்பம் போன்ற துன்பம் நேர்ந்தாலும், ஒக்கல் உதவி இருந்தால் தப்பித்துப் பிழைத்துக் கொள்ளலாம்.

பெயர்க்காரணம்[தொகு]

ஓரேருழவர் என்பது இவரின் இயற்பெயரன்று. அஃது இவரின் சிறப்புப் பெயராகும். குறுந்தொகையில் இவர் பாடிய பாடலில் அமைந்துள்ள அழகான உவமையே இவருக்கு இப்பெயரைத் தந்தது.

அவ்வுவமையானது:

பொருள் தேடித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் வினைமுடிந்து மீண்டு முல்லை நிலம் வழியாக வருகிறான். பெய்த மழையின் ஈரம் காயும் முன் வயலை உழுதுவிட விரைந்து செல்லும் ஒரே ஓர் ஏரை உடைய உழவனைப் போலத் தலைவியைக் காண தலைவனின் உள்ளமும் விரைந்தது.

வெளி இணைப்பு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. குறுந்தொகை 131
  2. புறம் 193 திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக்காஞ்சி. பொருண்மொழி என்பது உலக வாழ்க்கைமுறை, உலகம் கண்ட நீதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரேருழவர்&oldid=1854936" இருந்து மீள்விக்கப்பட்டது