ஓரேசு பெனடிக்ட் டி சாசர்

ஓரேசு பெனடிக்ட் டி சாசர் (Horace Bénédict de Saussure) என்பவர் ஒரு புகழ்பெற்ற ஜெனீவா நிலவியலாளர்[1], வானிலையியலாளர், இயற்பியலாளர் மற்றும் மலையேறுபவர் ஆவார். இவர் நவீன மலையேறுதல் மற்றும் நவீன வானிலையியலின் தந்தை என்று பரவலாக அழைக்கப்படுகிறார். வெற்றிகரமான முதல் சூரிய அடுப்பை உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார்.[2]
இளமைப் பருவம்
[தொகு]சாசர், செனீவா குடியரசிற்கு அருகிலுள்ள காஞ்சசு பகுதியில் 1740ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை நிக்கோலசு டி சாசர் வேளாண்மையாளரும். எழுத்தாளரும் ஆவார்.[3] இவரது தாயார் உடல்நலம் குன்றியிருந்ததால், சாசர் தனது அத்தை, அவரது கணவரான புகழ்பெற்ற இயற்கவியலாளர் சார்லசு பானெட் என்பவரால் வளர்க்கப்பட்டார். பானெட் மூலமாகவே இவருக்குத் தாவரவியல் மீது தொடக்ககால ஆர்வம் ஏற்பட்டது. தனது சொந்த ஊரில் பள்ளிக்கல்வியை முடித்த பின்னர், 1759ஆம் ஆண்டில் ஜெனீவா அகாதமியில் வெப்பம் தொடர்பான தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து கல்வியை நிறைவு செய்தார்.[சான்று தேவை] 1762ஆம் ஆண்டில் தத்துவப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அங்கு இயற்பியல், தர்க்கம், நிலவியல், வேதியியல், வானியல் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். தாவரவியலிலும் ஈடுபட்டார்.[4]
அறிவியல் ஆய்வுகள்
[தொகு]ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இவர் மேற்கொண்ட ஆய்வுகள், மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். 1760ஆம் ஆண்டு மோண்ட் பிளாங்க் சிகரத்தை முதலில் அடைபவருக்கு ஒரு பெரும் தொகையைப் பரிசாக அறிவித்தார். பின்னர், 1787ஆம் ஆண்டு, இவரே அந்தச் சிகரத்தை ஏறிச் சாதனை படைத்தார். வானிலை நிகழ்வுகளை அளவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், பல கருவிகளைக் கண்டுபிடித்தார். குறிப்பாக, வானத்தின் நீல நிறத்தை அளவிடும் வான்நீலம் அளவிடுவி,[5] வளிமண்டல ஈரப்பதத்தை அளவிடும் முடிகளைக் கொண்ட ஈரநிலைமானி, காற்றின் வேகத்தை அளவிடும் கருவி ஆகியவற்றை உருவாக்கினார். 1767ஆம் ஆண்டில், வெப்பக் கதிர்வீச்சைச் சேமிக்கக்கூடிய, மூன்று அடுக்குக் கண்ணாடிகளைக் கொண்ட நன்கு காப்பிடப்பட்ட பெட்டியைக் கொண்டு உலகின் முதல் மேற்கத்திய சூரிய அடுப்பை வடிவமைத்தார்.[6]
நிலவியலில் பங்களிப்பு
[தொகு]இவர் ஆல்ப்சு மலைத்தொடரில் ஏழு முறை பயணம் செய்து திரட்டிய தகவல்களை, வாயேஜஸ் டான்சு லெசு ஆல்பசு என்ற பெயரில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார்.[7] இவர் பாறைகள், தாதுக்கள், புதைபடிவங்களை ஆழமாக ஆராய்ந்தார். அனைத்துப் பாறைகளும் நீர்க்கரைசல் அல்லது இடைநீக்கத்திலிருந்து படிந்தவை என்ற நெப்டியூனியன் கோட்பாட்டை, இவர் உறுதியாக நம்பினார். இவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், உயரமான ஆல்பைன் காலநிலைகளில் வளரும் தாவரப் பேரினத்திற்கு சாசுரியா [8] என்றும், ஒரு வகை கனிமத்திற்கு சாசுரைட் [9] என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், நிலவின் ஒரு பெருவாய், இவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சுவிஸ் தேசிய வங்கியின் 20 பிராங்க் பணத்தாளிலும், இவரது உருவம் பொறிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ At his birth Geneva was an independent republic, and at his death it was the capital of the French department of Léman (department)
- ↑ René Sigrist, Le capteur solaire de Horace-Bénédict de Saussure. Genèse d'une science empirique. Genève, Passé-Présent / Jullien, 1993.
- ↑ Zumkeller, Dominique. 2001. Un père agronome: Nicolas de Saussure (1709-1791)" [An agronomist father: Nicolas de Saussure (1709-1791)]. In Sigrist, René (ed.) H.-B. de Saussure (1740-1799): un regard sur la terra [H.-B. de Saussure (1740-1799): A look at the Earth] (in French). Geneva: Bibliothèque d'Histoire des Sciences. Georg Editeur. pp. 395-408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-282570740-1
- ↑ Douglas W. Freshfield, Horace-Bénédict de Saussure, éd. Slatkine, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2832102026
- ↑ Sella, Andrea (September 28, 2010). "Classic Kit: Saussure's cyanometer". Royal Society of Chemistry, Chemistry World. Retrieved July 3, 2021.
- ↑ René Sigrist, Le capteur solaire de Horace-Bénédict de Saussure. Genèse d'une science empirique. Genève, Passé-Présent / Jullien, 1993.
- ↑ Coolidge 1911.
- ↑ Candolle, A.P. de, in Annales du Muséum National d'Histoire Naturelle. 16:197–198
- ↑ Hunt, T. Sterry (1859). "Contributions to the history of Euphotide and Saussurite". American Journal of Science 27, second series (81): 337. https://books.google.com/books?id=_fQQAAAAIAAJ&q=saussurite&pg=PA344. பார்த்த நாள்: 8 November 2016.