தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓரெழுத்தொருமொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓரெழுத்தொருமொழி [1] என்றால் 'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாக நின்று பிற பொருளைச் சுட்டும் சொற்கள்.[2] எடுத்துக்காட்டாகத் 'தீ' என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் 'நெருப்பு' என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே 'தீ' என்பது ஓரெழுத்தொருமொழி. ஓர் எழுத்து தன்னைக் குறிக்கும்போது எழுத்தாகிறது; அவ்வெழுத்தே பிற பொருளைச் சுட்டும் போது சொல்லாகிறது.

பழந்தமிழ்த் தொகுப்பு[தொகு]

ஓரெழுத்தொருமொழி பெயராகவும் வினையாகவும் வரும். அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் அவற்றைக் காணலாம்

நன்னூல் காண்டிகை உரை தொகுப்பு[தொகு]

 1. உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும்,
 2. ம வரிசையில் ஆறு எழுத்துகளும்,
 3. த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும்,
 4. க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும்,
 5. ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார்.
 6. நொ, து என்னும் இரு குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.[63]

இதுபோல் தமிழில் 52 ஒற்றை எழுத்துச் சொற்கள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. சொல்வளம் (vocabulary) என்ற வகையில் பார்த்தால் தமிழின் பல சிறப்புகளுள் இதுவும் ஒன்று. தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களின் முழுப் பட்டியலைப் பொருளுடன் காணலாம்.

 1. அ - 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
 2. ஆ - மாடு.
 3. இ - 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
 4. - ஒரு வகைப் பூச்சி, அழிவு.
 5. உ - 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
 6. ஊ - ஊன், இறைச்சி.
 7. எ - 'எந்த' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
 8. ஏ - ஏவுதல், அம்பு.
 9. ஐ - நுட்பம், அழகு.
 10. ஓ - சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
 11. க - நெருப்பு.
 12. கா - சோலை.
 13. கு - பூமி.
 14. கூ - கூப்பிடு.
 15. கை - கரம்.
 16. கோ - அரசன்.
 17. கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.
 18. சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல்.
 19. சே - சிவப்பு.
 20. சோ - மதில்.
 21. தா - 'கொடு' என்று ஏவுதல்.
 22. தீ - நெருப்பு.
 23. து - உண் என்னும் ஏவல். துக் கொற்றா
 24. தூ - தூய்மை.
 25. தை - தையல் எனப்படும் பெண், 'தை' என்று ஏவுதல்.
 26. ந - சிறப்பு.
 27. நா - நாக்கு.
 28. நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
 29. நூ - எள்.
 30. நே - நேசம்.
 31. நை - நைதல்.
 32. நொ - மென்மை.
 33. நோ - வலி.
 34. நௌ - மரக்கலம், கப்பல்.
 35. பா - பாடல்.
 36. பி - அழகு.
 37. பீ - கழிவு.
 38. பூமலர்.
 39. பே - அச்சம்.
 40. பை - பசுமை.
 41. போ - 'செல்' என்று ஏவுதல்.
 42. மா - ஒரு வகை மரம்.
 43. மீ - மிகுதியானது.
 44. மூ - மூன்று.
 45. மே - மேன்மை.
 46. மை - மசி (ink).
 47. மோ - மொள்ளுதல்.
 48. யா - 'யாவை' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
 49. வா - 'வா' என்று அழைத்தல்.
 50. வி - விசை.
 51. வீபறவை.
 52. வை - 'வை' என்று ஏவுதல்.

மேலே ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சில பொருள்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர அந்த ஒவ்வொரு ஓரெழுத்தொருமொழிக்கும் தமிழ் அகரமுதலிகள் கூறும் பொருள்கள் பல உள்ளன

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

தொல்காப்பியம் - மொழிமரபுச் செய்திகள்

மேற்கோள்கள்[தொகு]

 1. ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
  இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
  மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)

 2. ஓரெழுத்து ஒரு மொழி
 3. பசு (பெயர்)
 4. ஆதல் வினை
 5. பறக்கும் ஈ, ஈதல் வினை
 6. ஊன் என்னும் உடல் தசை
 7. அம்பு. ஏவுதலைக் குறிக்கும் வினை
 8. தலைவன்
 9. ஐ வியப்பு ஆகும்.(தொல்காப்பியம் 2=385)
 10. மதகு அடைக்கும் பலகை,
 11. நிறுத்தல் அளவைப் பெயர் அசைநிலைக் கிளவி (தொல்காப்பியம் 279)
 12. காவடி (1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து)
 13. காப்பாற்று
 14. கூவு (வினைச்சொல்)
 15. உடலிலுள்ள கை
 16. அக்கையில் ஆள் குறைகிறது = அந்தப் பக்கம்
 17. அரசன்
 18. வாயால் கௌவுதல் (வினைச்சொல்)
 19. சாதல் வினை
 20. சீத்தல்(சீய்த்தல்) வினை
 21. எருதைக் குறிக்கும் செயர்சொல்
 22. அரண் (பெயர்ச்சொல்)
 23. தா = குற்றம்
 24. தா என்னும் வினைச்சொல்
 25. எரியும் நெருப்பைக் குறிக்கும் பெயர்சொல்
 26. தீய்ந்து போதலைக் குறிக்கும் வினைச்சொல்
 27. உண்ணுதலைக் குறிக்கும் வினைச்சொல் (துன்பறூஉம் தூவாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புஉறூஉம் இன் சொல்லவற்கு - திலுக்குறள்)
 28. தேன், தேயம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்
 29. தை என்னும் மாதப் பெயர்
 30. தைத்தலைக் குறிக்கும் வினைச்சொல்
 31. நாக்கு
 32. முன்னிலைப் பொருளை உணர்த்தும் சொல்
 33. நோவுதல் வினை
 34. பாட்டு (பெயர்)
 35. பரப்பிப் பாவுதல் (வினை)
 36. மனிதனின் மலம்
 37. மலர் (பெயர்)
 38. மலர்தல் வினை
 39. மழைமேகம்
 40. பொருள்களை இடும் பை
 41. போதல் வினை
 42. அசைச்சொல் - “பிரியின் வாழா தென்போ தெய்ய” தொல்காப்பியமு 2-275 – தெய்வச்சிலையார் உரை மேற்கோள்
 43. மாமரம்
 44. மாமை நிறம் - எடுத்துக்காட்டு 'அம்மா அரிவை முயக்கு' (திருக்குறள்)
 45. 'மா' என் கிளவி வியங்கோள் அசைச்சொல். (தொல்காப்பியம் 2-273)
 46. `புற்கை யுண்கமா கொற்கை யோனே ' (தொல்காப்பியம், 2-273 சேனாவரையர் உரை மேற்கோள்
 47. கண்ணுக்குத் தீட்டும் மை
 48. பண்புப்பெயர் விகுதி - எடுத்துக்காட்டு கருமை, செம்மை
 49. முகர்தல் வினை
 50. முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம் 2-374
 51. `காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ' (குறுந்தொகை - 2)
 52. கட்டாகக் கட்டுதலைக் குறிக்கும் வினை
 53. பாட்டு யாத்தலைக் குறிக்கும் வினை
 54. அசைச்சொல் (தொல்காப்பியம் 2-279)
 55. யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனார்க்கு பாவலரேறு பாலசுந்தரம் தொல்காப்பியம் 2-280 உரை மேற்கோள்
 56. வருதல் வினை
 57. கீழே விழும் பூக்கள்
 58. கூர்மை
 59. 'வை' என்னும் ஏவல்
 60. தொல்காப்பியம் 1-44 இளம்பூரணர் உரை
 61. துக் கொற்றா = உண் கொற்றா
 62. நொக் கொற்றா = துன்புறு, துன்புறுத்து கொற்றா, (நன்னூல் மயிலைநாதர் உரை பக்கம் 72
 63. நன்னூல் ஆறுமுக நாவலர் காண்டிகை உரை[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]