உள்ளடக்கத்துக்குச் செல்

ஓருலைத் தொகுப்புமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓருலைத் தொகுப்புமுறை (One-pot synthesis) என்பது வேதியியல் வினையின் செயல்திறனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு தயாரிப்பு உத்தியாகும். இவ்வுத்தியின்படி, ஒரு வினைபடுபொருள் ஒரே குடுவையில் அடுத்தடுத்த வேதிவினைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வகையான ஓருலை தயாரிப்பு முறை வேதியியலர்களால் விரும்பப்படுகிறது. ஏனெனில் மிகநீண்ட பிரித்தெடுக்கும் செயல்முறையையும், இடைநிலை வேதிச்சேர்மங்களைத் தூய்மைப்படுத்தவும் செலவிடப்படும் நேரத்தைக் குறைத்து, அவர்களால் மேலும் உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறையில் ஈடுபடமுடியும்.

திரோப்பினோன் தயாரிக்க உதவும் மொத்தத் தொகுப்புமுறை அல்லது காசுமான் இண்டோல் தொகுப்புமுறை, இத்தகைய ஓருலை தொகுப்புமுறைக்கு சரியான உதாரணமாகும்.ஓசெல்டாமிவிர் [1] போன்ற பன்முக முப்பரிமான மையங்களைக் கொண்ட சிக்கலான சேர்மங்களை உற்பத்தி இலக்காகக் கொண்டு ஓரு வரிசையொழுங்கில் ஓருலை தொகுப்புமுறையைப் பயன்படுத்த முடியும்.

இம்முறை ஒட்டுமொத்தமாகத் தேவைப்படும் படிநிலைகளின் எண்ணிக்கையை கணிசமாக சுருக்குகிறது. இதனால் முக்கிய வணிக பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

வினையாக்கிகள் அனைத்தையும் ஒரேநேரத்தில் உலையில் சேர்த்து மேற்கொண்டு எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதால், ஓருலை தொகுப்புமுறையானது ஒடுக்கத் தொகுப்புமுறை என்றும் அழைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட ஒரு செயல்முறையில் [2], 3-என்-தோசிலமினோபீனால் I உடன் அக்ரோலீன் II வினைபுரிந்து ஐதராக்சில் குழு பதிலீடு செய்யப்பட்ட குயினோலினை III செயல் மற்றும் இடைநிலைகள் ஏதுமின்றி நான்கு வரிசையொழுங்கு படிநிலைகளில் அளிக்கிறது [3]

ஓருலைத் தொகுப்புமுறையில் 7-ஐதராக்சிகுயினோலின் தயாரித்தல்
ஓருலைத் தொகுப்புமுறையில் 7-ஐதராக்சிகுயினோலின் தயாரித்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ishikawa, H.; Suzuki, T.; Hayashi, Y. (2009). "High-yielding synthesis of the anti-influenza neuramidase inhibitor (-)-oseltamivir by three "one-pot" operations". Angewandte Chemie International Edition in English 48 (7): 1304–1307. doi:10.1002/anie.200804883. பப்மெட்:19123206. 
  2. Cameron, M.; Hoerrner, R. S.; McNamara, J. M.; Figus, M.; Thomas, S. (2006). "One-Pot Preparation of 7-Hydroxyquinoline". Organic Process Research & Development 10 (1): 149. doi:10.1021/op0501545. 
  3. The addition of acrolein (blue) is a Michael reaction catalyzed by N,N-diisopropylamine, the presence of எத்தனால் converts the ஆல்டிகைடு group to an acetal but this process is reversed when ஐதரோகுளோரிக் காடி is introduced (red). The enolate reacts as an electrophile in a பிரீடல்-கிராப்ட்சு வினை with ring-closure. The மதுசாரம் group is eliminated in presence of பொட்டாசியம் ஐதராக்சைடு (green) and when in the final step the reaction medium is neutralized to காரகாடித்தன்மைச் சுட்டெண் 7 (magenta) the tosyl group is eliminated as well.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருலைத்_தொகுப்புமுறை&oldid=2747766" இலிருந்து மீள்விக்கப்பட்டது