ஓருறுப்புமாறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் ஓருறுப்புமாறி (Univariate) என்பது ஒரே ஒரு மாறியைக் கொண்ட சமன்பாடு, கோவை, சார்பு அல்லது பல்லுறுப்புக் கோவை எனப் பொருள்படும். ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளை உள்ளடக்கிய வகையினை பல்லுறுப்புமாறி என வரையறுக்கலாம். ஓருறுப்புமாறி மற்றும் பல்லூறுப்புமாறிகளை வேறுபடுத்தி அறிவது அவசியமானது; அடிப்படையானது. எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் மற்றும் யூக்ளிடியன் பல்லுறுப்பு கோவையின் நெறிமுறைகள் ஆகியவை ஓருறுப்பு மாறியைக் கொண்டதாக அமைகின்றன. இதை பல்லுறுப்புமாறிகளுக்கு பொதுமைப்படுத்த இயலாது.

ஓருறுப்புமாறி என்ற கருத்தானது புள்ளியியலில் ஓருறுப்பு பரவல் மற்றும் பல்லுறுப்பு பரவல் என்ற வகையில் வேறுபடுத்தி பயன்படுத்தப்படுகிறது. ஓருறுப்பு தரவு என்பது ஒத்த ஸ்கேலார் பகுதியாகும். கால வரிசை பகுப்பாய்வியலில், இது ஒட்டு மொத்த கால வரிசையில் ஓருறுப்பு கால வரிசையை ஒத்த கால அளவுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது. பல்லுறுப்பு மாறி கால வரிசை என்பது வெவ்வேறு மதிப்புகளை வெவ்வேறு கால அளவில் பெறுகின்றன. சில நேரங்களில் ஓருறுப்பு மாறி மற்றும் பல்லுறுப்புமாறிகளைப் பயன்படுத்துவதில் குழப்பங்கள் நிலவுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓருறுப்புமாறி&oldid=3645181" இருந்து மீள்விக்கப்பட்டது