ஓரின இணைவியாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓரினயிணைவியாதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓரினயிணைவியாதல் (Homoassociation) என்பது அமிலம்காரம் வேதியியலில் ஒரு காரமும் அதனுடைய இணை அமிலமும் ஐதரன் பிணைப்பு மூலமாக கொண்டுள்ள இணைவைக் குறிக்கிறது. இச்சொல்லாட்சியானது ஐயுபிஏசி[1] இன் சொல்லாகும். ஓரின இணைத்தல் என்ற சொல்லாட்சியும் சிலவிடங்களில் பயன்படுத்தப்படுகிறது[2]. ஆனால், இது தெளிவற்றதாக உள்ளது ஏனெனில் கரிம வேதியியலில் ஒன்றுவிட்ட பிணைப்புத் திட்டம் என்றவொரு சொற்பிரயோகமும் வழக்கத்தில் உள்ளது.

பொதுவாக ஓரினயிணைவியாதலின் விளைவாக ஒரு அமிலத்தின் அமிலத்தன்மை அதனாலேயே அதிகரித்துக்கொள்ளப்படுகிறது. உயர் அடர்த்தி நிலைகளில் இச்செயல்விளைவு வலியுறுத்தப்படுகிறது. அதாவது ஓர் அமிலத்தின் அயனியாக்கல் பண்பானது அதன் அடர்த்தியுடன் நேரியல் சாராமல் வேறுபடுகிறது. ஆதார அமிலத்துடன் அதனுடைய இணை காரம் ஐதரசன் பிணைப்பு வழியாக நிலைப்படுத்திக் கொள்ளும்போது இவ்விளைவு தோன்றுகிறது. நன்கு அறியப்பட்ட உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலத்தைக் கூறலாம். குறிப்பாக இவ்வமிலம் அடர்த்தியாக இருக்கும் போதைவிட நீர்த்த நிலையில் வலிமையான அமிலமாக உள்ளது.

2 HF H2F+ + F (ஐதரோபுளோரிக் அமிலம் தன்னயனியாக்கம்) ]])
HF + F HF2 ((ஓரினயிணைவியாதல்)

ஒட்டுமொத்தமாக,:

3 HF HF2 + H2F+

இரட்டைபுளோரைடு எதிர்மின் அயனி (HF2−) HF இன் அயனியாக்கலை F−.அயனியை நிலைப்படுத்துவதன் மூலமாக ஊக்குவிக்கிறது. ஐதரோபுளோரிக் அமிலத்தின் அயனியாக்கல் மாறிலியின் பொதுமதிப்பான (10−3.15) அடர்த்தியான HF கரைசலில் குறைக்கப்படுகிறது. நீரிலா கரைசல்களில் பிரிகைவீதம் குறைவாக இருப்பதால் இந்த ஓரினயிணைவியாதல் விளைவு பெரும்பாலும் அதிகமாக நிகழ்கிறது. கார்பாக்சிலிக் அமிலங்களும் பீனால்களும் இப்பண்பை வெளிப்படுத்துகின்றன[3] . உதாரணம்: சோடியம் ஈரசிட்டேட்டு

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "Homoassociation". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Izutsu, compiled by Kosuke (1990). Acid-base dissociation constants in dipolar aprotic solvents. Oxford: Blackwell Scientific Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780632028757. https://archive.org/details/acidbasedissocia0000izut. 
  3. Kütt, Agnes; Leito, Ivo; Kaljurand, Ivari; Sooväli, Lilli; Vlasov, Vladislav M.; Yagupolskii, Lev M.; Koppel, Ilmar A. (March 2006). "A Comprehensive Self-Consistent Spectrophotometric Acidity Scale of Neutral Brønsted Acids in Acetonitrile". The Journal of Organic Chemistry 71 (7): 2829–2838. doi:10.1021/jo060031y. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரின_இணைவியாதல்&oldid=3583218" இலிருந்து மீள்விக்கப்பட்டது