ஓரிணை எதிரெதிர் புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'ஓரிணை எதிரெதிர் புலங்கள் ( Parallel opposing fields ) என்பது கதிர் மருத்துவம் மேற்கொள்ளளும் போது ஒன்றிற்கொன்று எதிராகவும் இணையாகவும் உள்ள கதிர்புலத்துடன் மருத்துவம் மேற்கொள்வதாகும்.இதனால் புறத் தோல் பரப்பில் ஏற்பளவு குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் புற்றிற்கு அதிக ஏற்பளவுகிடைக்க வழிஏற்படுகிறது..எடுத்துக்காட்டிற்காக 20 செ.மீ. தடிமனுடைய ஒரு நோயாளியின் நடுப்பகுதியில் புற்றுத்திசு இருப்பதாகக் கொள்வோம். அதாவது புற்று 10 செ.மீ. ஆழத்தில் அமைந்துள்ளது. எடுத்துக் காட்டிற்காக 10 செ.மீ. ஆழத்தில் ஏற்பளவு , 50 % என்றும் கொண்டால் புற்றினைஅழிக்க 60 கிரே ஏற்பளவு தேவைப் படும் நிலையில் ஒரே பக்கத்திலிருந்து கதிர் வீசுவதானால் 120 கிரே அந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட வேண்டும். எதிர் எதிர் பக்கத்திலிருந்து கொடுக்கும் போது ஒருபரப்பில் 60 கிரே அளவே போதுமானது.இவ்வாறு பரப்பு ஏற்பளவினைக் குறைக்கமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரிணை_எதிரெதிர்_புலம்&oldid=1888681" இலிருந்து மீள்விக்கப்பட்டது